Type Here to Get Search Results !

தமிழக அரசுக்கு விருதுகள் / AWARD FOR TAMILNADU GOVERNMENT 2020


உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியது
  • தேசிய அளவிலான 11-வது ஆண்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. கரோனா தொற்று காலக்கட்டம் என்பதால் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே முன்னிலையில் இணையவழியில் நிகழ்ச்சி நடந்தது. 
  • இதேபோல் சென்னையில் இருந்தபடி சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய உறுப்பினர் செயலர் ஆர்.காந்திமதி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோரும், புதுக்கோட்டையில் இருந்தபடி சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் பங்கேற்றனர்.
  • உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக 6-வது ஆண்டாக தமிழக அரசுக்கு விருது கிடைத்துள்ளது. துயரமான காலத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்த கொடையாளர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறோம். 
  • இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,392 பேரின் 8,245 உறுப்புகள் தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் கூட 107 கல்லீரல், 183 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 6 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
'இந்தியா டுடே' நிறுவனத்தின் சிறந்த மாநிலம் விருது
  • தேசிய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு செயல்பாடுகளை 'இந்தியா டுடே' நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து, 'மாநிலங்களில் சிறந்த மாநிலம்' என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.
  • அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த மாநில விருது தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. 2,000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகள்பெற்று ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இந்த விருதை தமிழக அரசு 2018, 2019-ம் ஆண்டுகளை தொடர்ந்து 2020-ம் ஆண்டிலும் பெறுகிறது.
  • கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியது, வணிகச்சூழல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. 
  • மாநிலப் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம்ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல், சுகாதாரம் பேணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மாநிலம் தேர்வு செய்யப்படுகிறது.
  • தற்போது இதன் அடிப்படையில், பெரிய மாநிலங்களுக்கு இடையில் சிறந்த மாநிலமாக முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் 6-ம் இடத்திலும், நாட்டின் பெரிய மாநிலங்களில் 12-வது இடத்திலும், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3-வது இடத்திலும் தமிழகம் உள்ளது. 
  • அதிக நகர்ப்புறங்கள் கொண்ட மாநிலமாகவும், தொழில்துறையில் வலுவான உற்பத்தி அடித்தளம், அதிக சேவைத் துறைகளை தன்னகத்தே கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது. அரசியல் தாக்கங்கள் இருந்த போதும்,தொழில் துறை வளர்ச்சிக்கு அரசுஅதிக முக்கியத்துவம் கொடுத்ததே, அதிக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியுள்ளது. 
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் போன்ற முகமைகள் அமைக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகளும் மாநிலத்தின் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை எட்ட உதவியுள்ளது.
  • தமிழகத்தில் தொழில் கட்டமைப்பு அனுமதி, நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி பெறுதல் போன்றவற்றுக்கான அறிவுரைகளை மாநில அரசின் ஒருங்கிணைந்த முதலீட்டு முகமை வழங்குவதன் மூலம் மாநிலத்தில் தொழில் முயற்சிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
  • கடந்த 2019-20 ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம்தான். ஆனால்,தமிழகம் தேசிய சராசரியைவிட 2 மடங்கு உயர்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. 
  • ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சதவீதம் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவு. முதலிடம் பெற்றதற்கான விருது வரும் டிச.5-ம் தேதி தமிழக அரசுக்கு வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel