Type Here to Get Search Results !

ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடு தொடர்பான அறிக்கை / REPORT ON CORRUPTION IN ASIAN COUNTRY

  • ஆசிய கண்டத்தில் இந்தியாவில்தான் அதிக லஞ்ச விகிதம்நிலவுகிறது. லஞ்சம் கொடுத்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர்லஞ்சம் தருமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், 32 சதவீதம் பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
  • அதிக லஞ்ச விகிதம் 39 சதவீதமாகவும், பொது சேவைகளைப் பெற தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தும் நபர்களின் விகிதம் 46 சதவீதமாகவும் இந்தியாவில் உள்ளது.
  • பொது சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் தரும் விஷயம் இந்தியாவை அதிக அளவு பாதிக்கிறது. தெளிவற்ற ஒழுங்குமுறை கட்டமைப்புகள், குடிமக்கள் தங்களது அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு மாற்று தீர்வுகளைத் தேடும்போது லஞ்சம் தருமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது.
  • லஞ்சத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள், பொது சேவைகளை வழங்குவதில் தங்களது நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும். மேலும் லஞ்சத்தைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
  • அதுமட்டுமல்லாமல் குடிமக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளை எளிதில் பெறுவதற்கு சுமூகமான நட்புச் சூழலை ஏற்படுத்துதல் வேண்டும். அதாவது ஆன்-லைன் சேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
  • அதே நேரத்தில் ஊழல் தொடர்பாக புகார் அளித்தால் தங்களுக்குத் தேவையான நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக, கம்போடியா 2-வது அதிகபட்ச லஞ்ச விகிதத்தை 37 சதவீதமாகக் கொண்டுள்ளது. 
  • அதைத்தொடர்ந்து இந்தோனேசியாவில்லஞ்சம் 30 சதவீதமாக உள்ளது. குறைந்தபட்சமாக மாலத்தீவு, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒட்டுமொத்த லஞ்ச விகிதம் 2 சதவீதமாக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel