Type Here to Get Search Results !

புயலுக்கு பெயர்கள் / HOW STORM WAS NAMED?


  • கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா நாட்டவர் தான் உருவாக்கினார்கள். 1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. 
  • கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. 
  • அந்த வகையில் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைத்தனர்.
இந்திய மண்டல நாடுகள் 
  • 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் படி மாநாட்டில் 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. 
  • 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் மாலத்தீவு மியான்மர் ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன
  • புயலின் வேகம் அது ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்து கொள்வதற்கு ஒரு அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் பிரான்சிஸ் பீ போர்டு உருவாக்கியதுதான் ஒன்றாம் எண் கூண்டு இரண்டாம் என் என்று 11 வரைக்கும் தொடருகிறது. அதுபோல நிவர் என்றால் வெளிச்சம் என்று பெயர் வைத்த நாடு ஈரான் ஆகும் 
  • உலகத்தின் பெருங்கடல்கள் அனைத்திலும் உருவாகும் புயல்கள் வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் ஆங்கிலத்தில் Cyclone எனப்படும். 
  • அதே போல் அட்லாண்டிக் கடலில் உருவாகும் புயல்கள் Hurricane எனவும், பசிபிக் பெருங்கடலில் வரும் புயல்கள் Typhoon எனவும் அழைக்கப்படுகின்றன.
  • வருடாவருடம் உலகம் முழுவதும் வீசும் புயல்களில் பெரும்பாலானவை பெரும் சேதத்தினை ஏற்படுத்தவல்லவை. புயலின் பாதிப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த விவரங்களை பதிவு செய்து வைப்பதற்கு இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2004 – ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருக்கிறது.
எப்படி பெயர் வைக்கப்படுகிறது ?
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் நிலவும் தட்பவெட்ப நிலைகளைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 
  • இந்த அமைப்பு உலகத்தினை 7 தட்பவெட்ப மண்டலங்களாக பிரித்துள்ளது. அதில் இந்தியா,” வட இந்தியப் பெருங்கடல்” மண்டலத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தியா உட்பட வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இந்த மண்டலத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த எட்டு நாடுகளும் எட்டு பெயர்கள் கொண்ட பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறது. மொத்தம் 64 பெயர்கள் பட்டியலிடப்பட்டிருகின்றன. இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவாகும்போது இந்த அட்டவணையிலிருந்துதான் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 
  • இதனை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணிக்கிறது. ஒவ்வொரு புயலின்போதும் வரிசைக் கிரமமாக பட்டியலில் இருந்து பெயர்கள் வைக்கப்படுகின்றன. 
  • டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.
  • இந்த வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணுவது;
  • அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது; ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது; 
  • ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது; மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.
  • சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.
புயலுக்கு பெயர் வைக்க 9 நிபந்தனைகள்
  • இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. இந்த புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், 
  • கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது; உலக அளவில் வாழும் மக்களில் எவ்விதத்தவரின் உணர்வை காயப்படுத்தும்படி பெயர் இருக்கக் கூடாது: மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக் கூடாது; 
  • சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையில் பெயர் இருக்க வேண்டும்; பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்; 
  • பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்; பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு; 
  • பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாக கூட அதை மறுஆய்வுக்கு உள்படுத்த அந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு; ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது.
  • நிவர் புயலைத் தொடர்ந்து, அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைப்படி புரேவி என்ற பெயர் வைக்கப்படும். 
  • இதுபோல, அடுத்த 25 வருடங்களில் ஏற்படும் புயல்களுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட்டு எப்போது புயல் வந்தாலும் அவற்றை சூட்டுவதற்கான தயார் நிலையில் நாடுகள் இருக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel