Type Here to Get Search Results !

TNPSC 11th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது மேற்குவங்க அரசு

  • நாடு முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. 
  • இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 
  • மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும், மருத்துவம் , மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் வருகின்றன.
  • மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம் - (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: நிதி ஆயோக் மற்றும் கனரக தொழில்கள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 18,100 கோடி ரூபாய்.
  • மின்னணு/தொழில்நுட்பப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 5000 கோடி ரூபாய்.
  • வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: கனரக தொழில்கள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 57042 கோடி ரூபாய்.
  • மருந்துகள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: மருந்துகள் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 15000 கோடி ரூபாய்.
  • தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: தொலைதொடர்பு அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 12195 கோடி ரூபாய்.
  • ஜவுளிப் பொருட்கள்: மனிதர்களால் செய்யப்படும் இழைகள் பிரிவு மற்றும் தொழில்நுட்ப ஜவுளி (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை): ஜவுளி அமைச்சகம், ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 10683 கோடி ரூபாய்.
  • உணவுப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 10900 கோடி ரூபாய்.
  • அதிகத் திறன் கொண்ட சூரிய சக்தி ஒளி மின்னழுத்தப் பொருட்கள் (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 4500 கோடி ரூபாய்.
  • வீட்டுப்பயன் கருவிகள் (குளிர்சாதனப் பெட்டிகள் & எல் ஈ டி) (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 6238 கோடி ரூபாய்.
  • சிறப்பு எஃகு (செயல்படுத்தும் அமைச்சகம் / துறை: எஃகு அமைச்சகம்) ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி 6322 கோடி ரூபாய்.
  • ஐந்து வருட காலத்துக்கு மேற்கண்ட அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் 145980 கோடி ரூபாய் உற்பத்தி சார்ந்த உதவித் தொகையாக வழங்கப்படும்.

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் ஒடிடி தளங்கள்

  • இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், திரைப்பட தயாரிப்பாளர்கள தங்களது படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகிறன்றனர். 
  • இதில் ரசிகர்கள் அதிகளவு உபயோகிப்பதால், இணைய தொடர்கள், திரைப்படங்கள் அதிகளவு வெளியாகி வருகின்றன. மேலும் ஓடிடி தளத்தில வெளியாகும் படங்களுக்கு சென்சார் கிடையாது என்பதால் ஆபாச காட்சிகள், அவதூறு காட்சிகள், கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெறுவதாக பலர் புகார் அளித்து வந்தனர்.
  • இதனிடையே ஆபாசமான பதிவுகளை ஒளிப்பரப்பியதாக பிரபல ஓடிடி தளமான ஆல்ட் பாலாஜி (ALT Balaji) உட்பட 7 ஆன்லைன் ஓடிடி தளங்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
  • இதனால், ஓடிடி தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
  • இதன் மூலம் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், அவற்றில் வெளியாகும் படங்கள், சீரியல்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 
  • இதனால் இனி இணைய தொடர்கள் சென்சார் செய்யப்படவோ, அதன் கருத்துருவாக்கம் தவறாக இருக்கும் பட்சத்தில் நீக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் 
  • பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார்.
  • எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கலிஃபா பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், இன்று அவர் மரணமடைந்தார்.
  • உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா புதன்கிழமை மரணமடைந்தார்.
  • அவரின் இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். 
  • 2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர் மீது போராட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
  • 1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார்.
  • சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே 1971 இல் பஹ்ரைன் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றபோது மன்னராக பணியாற்றினார்.
  • கலிஃபா பிரதமரான பிறகு, எண்ணெய் இருப்புக்கள் குறைந்து வருவதை கவனித்து, அதையும் தாண்டி பஹ்ரைன் வேகமாக முன்னேற சுற்றுலாத் துறையை மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel