பீகார் ஆட்சியைப் பிடித்தார் நிதிஷ், தனிப்பெரும் கட்சியாக தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி
- பீகார் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில்
- ஆரம்பத்தில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் அணி முன்னிலையில் காணப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு பாஜக - ஜே.டி.யு அணி முன்னிலை பெறத் தொடங்கியது.
- எனினும் ஆர்.ஜே.டி கடும் போட்டியைக் கொடுத்தது. அணிகளும் மிகவும் நெருக்கமான போட்டியை வாக்கு எண்ணிக்கையில் எதிர்கொண்டன.
- எனினும் பாஜக அணி அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளையொட்டி தனது முன்னிலைக் கணக்கை தொடர்ந்தபடியே இருந்தது.
- முடிவில் பாஜக - ஜேடியு அணி 125 இடங்களையும், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் அணி 110 இடங்களையும் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
5வது முறையாக சேம்பியன் ஆன மும்பை இண்டியன்ஸ்
- டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் அடிக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ரகானே 2 ரன்களிலும்,ஷிகர் தவான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- அதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்ததனர். இருவரும் அரைசதம் அடித்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
- 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா, டி காக் ஜோடி 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தது. அப்போது டிகாக் அவுட் ஆனார்.
- அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்தார். 18.4 ரன்களில் 157 ரன்களை எடுத்து மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை இண்டியன்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசுக்கு ரூ.335 கோடி நிதி மத்திய அரசு அறிவிப்பு
- கடந்த மாதம் நடத்தப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.9,627 கோடி கடன் வாங்கிக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- இந்நிலையில், தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்து, கடந்த 2ம் தேதி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.
- இதில், தமிழகத்திற்கு மட்டும் ரூ.335 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது,' என கூறப்பட்டுள்ளது.
20 ராணுவ குதிரைகள், 10 மோப்ப நாய்கள்: வங்கதேச ராணுவத்துக்கு பரிசளித்தது இந்தியா
- இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தும் முயற்சியாக, வங்கதேச ராணுவத்துக்கு, 20 பயிற்சி பெற்ற குதிரைகள், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் 10 மோப்ப நாய்களை வங்கதேச ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் பரிசளித்தது.
- இந்தக் குதிரைகளும், மோப்ப நாய்களும் இந்திய ராணுவத்தின் குதிரை மற்றும் கால்நடை படைப்பிரிவில் பயிற்சி பெற்றவை. இந்தக் குதிரைகளுக்கும், மோப்ப நாய்களுக்கும் பயிற்சி அளிக்கவும், கையாளவும், வங்கதேச ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.
- குதிரைகள் மற்றும் மோப்ப நாய்களை பரிசளிக்கும் நிகழ்ச்சி, இந்தியா- வங்கதேச எல்லையில் பெட்ரோபோல்-பெனோபோல் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நடந்தது.