Type Here to Get Search Results !

TNPSC 9th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பஞ்சாபில் சி.பி.ஐ. எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்ய அளித்திருந்த ஒப்புதலை திரும்ப பெற்ற பஞ்சாப் அரசு
  • நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன (டி.பி.எஸ்.இ.) சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு பொது ஒப்புதல் அளித்துள்ளன. 
  • இதனால் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் வழக்குகளை சி.பி.ஐ.யால் நேரடியாக விசாரிக்க முடியும். இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. ஆட்சி இல்லாத பல மாநில அரசுகள் சி.பி.ஐ.க்கு அளித்து பொது ஒப்புதலை திரும்ப பெற்று வருகின்றன.
  • இதனால் அந்த மாநிலங்களில் எந்தவொரு வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமானால் முதலில் சம்பந்தபட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். 
  • ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சி.பி.ஐ.க்கு அளித்து இருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றன. தற்போது இந்த பட்டியலில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் அரசும் இடம் பிடித்துள்ளது.
  • பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு டி.பி.எஸ்.இ சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அளித்திருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றது. 
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் போக்கு நிலவிவரும் சூழ்நிலையில், சி.பி.ஐ. அளித்து இருந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலஞ்சர்ஸ் டி20 கிரிக்கெட் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணி சாம்பியன்
  • இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெண்களுக்காக சேலஞ்சர்ஸ் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜாவில் நடந்தது. 
  • 3 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ்-ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
  • இதில் இறுதிப்போட்டியில் 'டாஸ்' வென்ற சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டிரைல் பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் டிரைல் பிளாசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
  • அதிகபட்சமாக மந்தனா 49 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். சூப்பர் நோவாஸ் தரப்பில் ராதா யாதவ் 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.
  • தொடர்ந்து 119 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 ரன்கள் எடுத்தார். 
  • இதனால் டிரைல் பிளாசர்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிரைல் பிளாசர்ஸ் அணி தரப்பில் சல்மா கதுன் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முதன் முறையாக ஹைபர் லூப்பில் மனிதர்கள் பயணித்து சோதனை வெற்றி
  • அமெரிக்காவை சேர்ந்த விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனம், காந்த விசையை பயன்படுத்தி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. 
  • காந்தப்புல தடத்தின் மீது அந்தரத்தில் காற்றில்லா குழாயினுள் அமைக்கப்படும் பெட்டிகளில் அதிக வேக பயணம் செய்வதே ஹைப்பர் லூப். விர்ஜின் ஹைப்பர் லூப் நிறுவனம் கடந்த ஞாயிறன்று ஹைப்பர் லூப் ரயில் சோதனையை மேற்கொண்டுள்ளது.
  • நிவேடாவில் உள்ள டெவ்லூப் சோதனை தளத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜோஷ் கீகல், பயணிகள் அனுபவப் பிரிவின் இயக்குனர் சாரா லூச்சியன் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். 
  • இவர்கள் மணிக்கு 172 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக பயணித்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனம் 400 சோதனைகளை மேற்கொண்டுள்ளது. மனிதர் பயணம் செய்து சோதனை நடத்தியுள்ளது. 
  • இதுவே முதல் முறையாகும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக கருதப்படுகிறது. விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனமானது 2025ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சான்றிதழை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. 2030ம் ஆண்டில் வர்த்தக ரீதியாக ஹைப்பர் லூப்கள் இயக்கம்தொடங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஹைபர் லூப் பயணத்தின்போது எந்தவித சத்தமும் கேட்காது.அதிகபட்சமாக மணிக்கு 1000 கிமீ மேல் செல்லும்.
  • இதில், நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன்னுக்கு 30 நிமிடங்களில் சென்றுவிடலாம். இந்த தூரத்தை விமானம் மூலம் கடக்க சுமார் ஒரு மணி நேரமாகும்.
  • இது ஜெட் விமானத்தை விட இரு மடங்கும், அதிவேக ரயில்களைக் காட்டிலும் 4 மடங்கும் விரைவாகவும் செல்லக்கூடியது.
15வது நிதிக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் தாக்கல்
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஐந்தாண்டு திட்டத்திற்கான அறிக்கையை 15வது நிதிக் குழு அளித்தது. கடந்த 2016ல் மத்திய அரசு என்.கே.சிங் தலைமையிலான 15வது நிதிக் குழுவை அமைத்தது. 
  • மத்திய மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராய்ந்து வளர்ச்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை இக்குழு பரிந்துரைத்து வருகிறது. நேற்று இக்குழுவின் தலைவர் என்.கே.சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து 2021 - 26 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார். 
  • மாநிலங்களின் நிதியாதாரங்களை ஆராய்ந்து ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகள் குறித்து அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நிதிக் குழு தெரிவித்துள்ளது.பார்லி.யில் நிதிக் குழு அறிக்கை தாக்கல் செய்த பின் அதன் விபரங்கள் தெரியவரும்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் வரி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் பொறுப்பும் இக்குழுவுக்கு உள்ளது. 
  • பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியான மானியம் செலுத்துவது உள்ளிட்டவற்றில் மாநிலங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதற்கேற்ப ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக அறிக்கை அளிக்கும் பணியும் நிதிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாலத்தீவில் குழந்தைகளுக்கான 67 பூங்காக்களை கட்டித் தந்தது இந்தியா
  • மாலத்தீவில் (Maldives) உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கும், பொருளாதார தளத்தை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதாரத்தை மேலும் வலுவாக்கவும், உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ள நிலையில், இந்தியா மாலத்தீவுகளில் கட்டியுள்ள 67 குழந்தைகள் பூங்காக்களை திங்கள்கிழமை ஒப்படைத்தது.
  • இதற்கான நிகழ்ச்சியில், இரண்டு நாள் பயணமாக இங்கு வந்துள்ள வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, 67 குழந்தைகள் பூங்காக்களை பரிசளிப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், தீவுகளில் உள்ள வடக்கு முதல் தெற்கு முதல் அனைத்து பகுதிகளும் பயனடையும் என்றார்.
  • இந்தியா மாலத்தீவின் (Maldives) நெருங்கிய அண்டை நாடு மற்றும் சிறந்த நட்பு நாடு என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.
  • உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், பொருளாதார தளத்தை விரிவுபடுத்துதல், பொருளாதாரத்தை (Economy) மிகவும் வலுவாக்குதல், வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுவதற்கும் மாலத்தீவு அரசாங்கத்தை ஆதரிப்பதை இந்தியா (India) நோக்கமாகக் கொண்டுள்ளது, ஷ்ரிங்க்லா கூறினார்.
  • இந்தியாவிற்கு மாலத்தீவுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஒப்பந்தங்கள் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் முதல் மிக முக்கிய சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் (HICDP) வரை உள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தீவில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையில் உடனடி மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் இலவச அதிவேக வைஃபை சேவை - உத்தராகண்டில் அதிரடி
  • உத்தராகண்டில் அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இலவச அதிவேக வைஃபை சேவையை அம்மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.
  • அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர், ''நாட்டிலேயே முதல்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இலவச மற்றும் அதிவேகமான வைஃபை சேவையை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel