Type Here to Get Search Results !

உலக உணவு தினம் / WORLD FOOD DAY

  • உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. 
  • நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஒரு மனிதனின் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு அவசியமாகும். உலகில் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காகவும், உண்ணும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். 
  • ஊட்டசத்து குறைவால் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் அக்.,16 உலக உணவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • உலகையை மிரட்டும் கொரோனாவிற்கு மருந்து கண்டுப்பிடிக்காத சூழ்நிலையில், சத்தான உணவுகளை மருந்தாக கடைப்பிடித்து கொடிய கொரோனா நோயில் இருந்து பலர் குணமடைந்துள்ளனர்.
  • அதிகரிக்கும் கலப்படம்அன்றாடம் பயன்படுத்தும் பால், டீத்துாள், அரிசி, பால், மளிகைப் பொருட்கள், எண்ணெய், குளிர்பானங்கள் என அனைத்திலும் கலப்படம் செய்து முறைகேடு நடக்கிறது. 
  • இந்த பொருட்களை சாப்பிடும்போது குழந்தை முதல் முதியவர் வரை இதயம், கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உணவு என்பது கைவழியாக எடுத்து வாய்வழியாக உள்ளே சென்று சக்தியை கொடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel