Type Here to Get Search Results !

TNPSC 14th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு பாகிஸ்தான் மீண்டும் தோவு

  • மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு கவுன்சிலில் இடம் அளிக்கக் கூடாது என்று சா்வதேச அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இந்தத் தோவு நடைபெற்றுள்ளது.
  • ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினா்களைத் தோந்தெடுப்பதற்காக ஐ.நா.பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அதிகபட்ச வாக்குகளைப் பெற்று பாகிஸ்தான் மீண்டும் தோந்தெடுக்கப்பட்டது.
  • உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அளித்து வரும் பங்களிப்பின்மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளதையே இது காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா - கரீபியன், மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் என பிராந்தியவாரியாக 47 உறுப்பினா்கள் தோந்தெடுக்கப்படுகின்றனா்.
  • ஒவ்வொரு நாடும் தோந்தெடுக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும். அந்த வகையில், பாகிஸ்தானின் உறுப்பினா் அந்தஸ்து இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. 
  • இந்த நிலையில், இந்த ஆண்டு காலியாகும் இடங்களுக்கு உறுப்பினா்களைத் தோந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்றது. 
  • இந்த வாக்குப் பதிவில் பாகிஸ்தான் 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. உஸ்பெகிஸ்தான் 164 வாக்குகளும் நேபாளம் 150 வாக்குகளும் சீனா 139 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றன. 90 வாக்குகளுடன் சவூதி அரேபியா தோல்வியடைந்தது.
  • ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டிருந்து, அதன் உறுப்பினராக பாகிஸ்தான் தோந்தெடுக்கப்படுவது இது 5-ஆவது முறையாகும்.
வளரும் நாடுகள் கரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்காக 1,200 கோடி டாலா் (சுமாா் ரூ.87,900 கோடி) கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்
  • வளரும் நாடுகளில் 100 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதற்கு உலக வங்கி இலக்கு நிா்ணயத்துள்ளது. அதற்காக, அந்த நாடுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கும் பொதுமக்களிடையே விநியோகிப்பதற்கும் 1,200 கோடி டாலா் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்காக வளரும் நாடுகளுக்கு 16,000 கோடி டாலா் வரை (ரூ.11.72 லட்சம் கோடி) உதவியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • அதன் ஒரு பகுதியாகவே, கரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிப்பதற்காக 1,200 கோடி டாலா் கடனுதவி அளிக்கப்படுகிறது. உலக வங்கியின் கரோனா எதிா்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 111 நாடுகள் பலனடைந்து வருகின்றன.
  • இந்தச் சூழலில், பின்தங்கிய நாடுகளைச் சோந்தவா்கள் உள்பட உலகின் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் பாகுபாடின்றி கிடைக்கச் செய்வது மிகவும் அவசியமாகும். இதற்காகவே அந்த நாடுகளுக்கு கடனுதவி அளிக்கப்படுகிறது.

ரஷியாவின் சோயுஸ் விண்கலம் புதிய சாதனை

  • ரஷிய விண்வெளி வீரா்கள் சொகெய் ரைஷ்கோவ், சொகெய் குத்ஸொஷ்கோவ், அமெரிக்க விண்வெளி வீரா் கேத்லீன் ரூபின்ஸ் ஆகிய மூவரையும் ஏற்றிக் கொண்டு, ரஷியாவின் சோயுஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • அவா்கள் மூவரும் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, கஜகஸ்தானிலுள்ள பைகானுா் ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
  • இதுவரை இல்லாத வகையில் மிகவும் துரிதமாக அந்த விண்கலம் ஆய்வு மையத்தைச் சென்றடையும் வகையில் ஏற்கெனவே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
  • அதையடுத்து, அந்த விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்ட 3 மணி நேரம் 3 நிமிஷங்களில் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இணைக்கப்பட்டதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மாஸ் தனது டுவிட்டா் பதிவில் தெரிவித்தது.
  • இது, மனிதா்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தில் ஒரு சாதனையாகும். கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு முன்னா் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்கலங்கள் சென்றுவர 2 நாள்கள் ஆகின. ஆனால், அதற்குப் பிறகு புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள் காரணமாக அந்த நேரம் குறைக்கப்பட்டு வந்தது.
திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிலத்தடி நீர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா ஆஸ்திரேலியா இடையோன ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB), நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்பு துறை மற்றும் ஆஸ்திரேலியாவின் நிலத்தடி நீர் மேலாண்மை நிறுவனமான மார்வி பார்ட்னர்ஸ் ஆகியவை இடையே கடந்தாண்டு அக்டோபரில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துக் கூறப்பட்டது. 
  • நிலத்தடி நீர் உட்பட நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் கல்வியில் ஒத்துழைப்புடன் செயல்படவும், வேளாண்மை, நகர்ப்புறம், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்கான நீர்பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு 520 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத் தொகுப்பு அளிக்க ஒப்புதல்
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு 520 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத் தொகுப்பு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 
  • இதன்படி வரும் 2023-24 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு தீனதயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
  • தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடம் (என்எம்டிசி) இருந்து, நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதில் உள்ள மத்திய அரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.
பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5,718 கோடி மதிப்பிலான உலக வங்கியின் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மாநிலங்களுக்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் (ஸ்டார்ஸ்) திட்டத்தை ரூ.5718 கோடி செலவில்அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த நிதியில் ரூ.3700 கோடி அளவுக்கு உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது. ஸ்டார் திட்டம், கல்வித்துறை அமைச்சகத்தின், பள்ளி கல்வித்துறையின் கீழ் மத்திய அரசின் புதிய திட்டமாக அமல்படுத்தப்படும்.
  • மத்திய அரசின் பள்ளி கல்வித் துறையின் கீழ் 'பராக்' என்ற தேசிய மதிப்பீடுமையம் அமைக்கப்படுகிறது. இத்திட்டம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. 
  • இந்த மாநிலங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும். இதே போன்ற திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், குஜராத், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்கஙளில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் சிறந்த முறைகளை ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்ளும்.
  • பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தவும், மதிப்பீடு செய்யவும், வேலை வாயப்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை திறமையானவர்களாக மாற்றவும் தேவையான உதவிகளை ஸ்டார்ஸ் திட்டம் வழங்கும். 
  • ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒட்டு மொத்த கவனம் மற்றும் அம்சங்கள், தேசிய கல்வி கொள்கை நோக்கங்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த ஸ்டார் திட்டம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், பள்ளி கல்வி முறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டார்ஸ் திட்டத்தில் 2 முக்கிய அம்சங்கள் உள்ளன:
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்பெறும் வகையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை தேசியளவில் மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது. 
  • மாணவர்களைத் தக்கவைத்தல், மாற்றம் செய்தல் மற்றும் கல்வி நிறைவு விகிதங்கள் குறித்த வலுவான மற்றும் உண்மையான தகவல்களை திரட்ட கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவு அமைப்புகளை வலுப்படுத்துதல். 
  • ஊக்கத் தொகை மானியம் அளித்து, மாநிலங்களின் செயல்பாடு தர அளவீடை(பிஜிஐ) மேம்படுத்த கல்வி அமைச்சகத்துக்கு உதவுதல் கற்றல் மதிப்பீடு முறைகளை வலுப்படுத்த உதவுதல்.
  • தேசிய மதிப்பீடு மையம் (பராக்) அமைக்க உதவுதல். தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கல்வி தொடர்பான அனுபவங்களை ஆன்லைன் மூலமா பகிர்ந்து கொள்வதை ஊக்கப்படுத்துவது இந்த மையத்தின் பணிகளில் ஒன்றாக இருக்கும்.
  • மேலும், ஸ்டார் திட்டத்தில் அவசர கால நடவடிக்கை அம்சமும் (CERC) உள்ளது. இயற்கை, செயற்கை மற்றும் சுகாதார பேரிடர் ஏற்படும் சூழ்நிலையில், இது அரசுக்கு உதவும். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொலை தூர கல்விக்கு ஏற்பாடு செய்யும்.
  • மாநில அளவில், இத்திட்டம் ஆரம்பகால குழந்தை பருவ கல்வி மற்றும் அடிப்படை கல்வியை வலுப்படுத்தும். கற்றல் மதிப்பீடு முறைகளை வலுப்படுத்தும். 
  • வழிகாட்டுதல் மற்றும் கவுன்சலிங் மூலம் பள்ளிகளில் தொழில் கல்வியை வலுப்படுத்தப்படும். பிரதமரின் இ-வித்யா, அடிப்படை கல்வி திட்டம், குழந்தை பருவ கல்விக்கான தேசிய பாடத்திட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஸ்டார்ஸ் திட்டம் கவனம் செலுத்தும். 
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், 3வது மொழியில், மாணவர்கள் குறைந்த பட்ச புலமை பெற்றிருப்பதை அதிகரிக்கும் சில நடவடிக்கைகளும் இந்த ஸ்டார்ஸ் திட்டத்தில் உள்ளன.
தமிழக அரசு கூடுதலாக 9 ஆயிரத்து 267 கோடி கடன் பெற்றுக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நடப்பாண்டுக்கான ஜூலை மாதம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையான10 ஆயிரத்து 774 கோடி ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தினார். மாநிலங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கினால் மட்டுமே பொருளதாரத்தை புதுப்பிக்க இயலும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
  • இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க போதிய நிதி இல்லை எனக் கூறியுள்ள மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசு கூடுதலாக 9 ஆயிரத்து 267 கோடி கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அரசு வேலைகளில் 33% பெண்கள் இடஒதுக்கீடு பஞ்சாப் மாநில அரசு அதிரடி முடிவு
  • அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிசாய்க்கப்பட்ட நாள். பெண்களின் உரிமை மற்றும் அதிகாரம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார் பஞ்சாப் மாநில முதலமைச்சர். 
  • மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அமைச்சர்களின் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
  • அரசாங்கத்தில் உள்ள பதவிகளுக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யும்போது, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (பெண்களுக்கான பதவிகளை ஒதுக்கீடு செய்வது) விதிகளுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • மேலும், வாரியங்கள் மற்றும் நகராட்சிகளில் ஏ, பி, சி மற்றும் டி பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்யும்போதும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுப்பது கட்டாயமாகும்.
  • நீதிமன்ற வழக்குகள் / சட்ட விவகாரங்களை சரியான நேரத்தில, பயனுள்ள முறையில் தொடர, பஞ்சாப் சிவில் செயலக (மாநில சேவை வகுப்பு -3) விதிகள், 1976 ஐ திருத்தியது பஞ்சாப் அமைச்சரவை. பஞ்சாப் சிவில் செயலகத்தில் ஒரு சட்ட எழுத்தர் பணியாளரை உருவாக்குவதற்கு ஆட்சேர்ப்பு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது குறித்து தகவல் தெரிவித்த அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர், பொது எழுத்தர் பணி தொடர்பான 100 பதவிகளை நீக்கப்படுவதாகவும், இதனால் நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.
  • இது தவிர, 2020-22 மாநில வேலைவாய்ப்பு திட்டத்திற்கும் முதல்வர் அமரீந்தர் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் கீழ், 2022 ஆம் ஆண்டில், மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ், அரசு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் துரிதகதியில் நியமனங்கள் செய்யப்படும்.
  • மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றுவதற்காக அக்டோபர் 19 ம் தேதி மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஹரியாணாவில் 30 சமஸ்கிருத மாதிரிப் பள்ளிகளுக்கு ஒப்புதல்
  • ஹரியாணாவில் 30 சமஸ்கிருத ஆரம்ப பள்ளிகள் மற்றும் ஒரு சமஸ்கிருத உயர்நிலை பள்ளி திறக்க மாநில தொல்பொருள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • முதலமைச்சர் மனோகர் லால், துணை முதலமைச்சர் திரு. துஷ்யந்த் சவுதாலா மற்றும் கல்வி அமைச்சர் திரு. கன்வர் பால் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு படி முன்னேறி சமஸ்கிருத மாதிரி பள்ளிகளை அமைத்துள்ளது.
  • இதில் அக்ரோஹாவில் 11 பள்ளிகள், பார்வாலாவில் 10 பள்ளிகள், உக்லனாவில் 8 ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி திறக்கப்படும் என்றார்.
எப்ஏஓ-வின் 75-வது ஆண்டு தினம்; ரூ.75 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், வரும் 16-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
  • இந்த நிகழ்ச்சி வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் அரசின் முன்னுரிமையைக் காட்டும் விதத்தில் அமையும். வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுவது ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சாசனமாக, இது திகழும். 
  • நாடு முழுவதையும் சேர்ந்த அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இதன் பார்வையாளர்களாக இருப்பார்கள். 
  • மத்திய வேளாண் அமைச்சர், நிதி அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
  • பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள மக்களை பொருளாதார ரீதியாகவும், ஊட்டச்சத்து மூலமாகவும் வலிமையானவர்களாக மாற்றும் எப்ஏஓ-வின் பயணம், ஈடு இணையற்றதாகும். இந்த அமைப்புடன் இந்தியாவுக்கு வரலாற்று தொடர்பு உள்ளது. 
  • இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி டாக்டர் பினய் ரஞ்சன் சென், இந்த அமைப்பின் தலைமை இயக்குநராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார். 
  • 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வென்ற உலக உணவு திட்டம், அவரது காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 2016-ம் ஆண்டை சர்வதேச பருப்பு வகை ஆண்டு எனவும், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனையை எப்ஏஓ ஏற்றுக் கொண்டது.
  • 10 கோடிக்கும் மேற்பட்டவர்களிடத்தில் உள்ள மயக்கம், தடுமாற்றம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தசோகை, பிறக்கும் சிசுவின் எடை குறைவு ஆகிய குறைபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டு, லட்சிய திட்டமான போஷான் அபியான் இயக்கத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 
  • ஊட்டச்சத்து குறைபாடு என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தக் குறைபாட்டால், சுமார் 200 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் இறப்பில் சுமார் 45% சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது. ஐ.நா.வின் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
  • சர்வதேச முன்னுரிமையுடன் இணைந்து, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம், முழுமையான புரதம், உயர் லிசின், டிரிப்டோபான் புரோ வைட்டமின் ஏ, ஒலியக் அமிலம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் குறைக்கும் தன்மை கொண்ட தரமான புரதம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட ஊட்டச்சத்து மிக்க ரகங்களை உருவாக்குவதே அரசின் முன்னுரிமையாக உள்ளது. 
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமையில் இயங்கும் தேசிய வேளாண் ஆராய்ச்சி முறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற 53 ரகங்களை உருவாக்கியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு உயிரி செறிவூட்டிய ரகம் ஒன்றுதான் உருவாக்கப்பட்டது.
  • அண்மையில் உருவாக்கப்பட்ட 8 பயிர் வகைகளின் 17 உயிரி செறிவூட்டிய ரகங்கள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன. இவை 3 மடங்கு ஊட்டச்சத்து கொண்டவை. சிஆர் தான் 315 அரிசி ரகம் அதிக துத்தநாகச் சத்து கொண்டது; எச்1 1633 ரக கோதுமையில், புரதம், இரும்பு, துத்தநாகச் சத்துக்கள் உள்ளன; 
  • எச்டி 3298 -ல் புரதம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் உள்ளன; டிபிடபிள்யு 303, டிடிடபிள்யு 48 கோதுமைகள் புரதம் நிரம்பியவை; லதோவால் தர புரத மக்காச் சோளம் உயர் விளைச்சல் 1,2,3 ரகங்கள் லிசின், டிரிப்டோபான் ஆகியவற்றைக் கொண்டுள்ளன; 
  • சிஎப்எம்வி1,2 விரல் திணை, கால்சியம், இரும்பு, துத்தநாக சத்துக்கள் கொண்டவை; சிஎல்எம்வி1 சிறு திணை இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து நிரம்பியது; 
  • புசா கடுகு 32 ரகம் குறைவான இருசிக் அமிலத்தன்மை கொண்டது; கிர்னார் 4,5 வேர்க்கடலை, மேம்படுத்தப்பட்ட ஒலிசிக் அமிலம் கொண்டது; ஶ்ரீ நீலிமா, டிஏ340 ரக வள்ளிக்கிழங்கு மேம்படுத்தப்பட்ட துத்தநாகம், இரும்பு, அந்தோசியானின் அம்சங்களை உள்ளடக்கியது.
  • இந்த ரகங்கள் மற்ற உணவு வகைகளுடன் இந்திய உணவை ஊட்டச்சத்து மிக்க உணவாக மாற்றக்கூடியவை. உள்ளூர் நிலப்பரப்பு, வேளாண் ரகங்களிலிருந்து இந்த ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
  • அசாமின் காரோ மலையில் சேகரிக்கப்பட்ட அரிசி வகையைக் கொண்டு, துத்தநாகச் சத்து மிக்க அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் தங் மாவட்டத்தின் விரல் திணைகளும் செறிவூட்டப்பட்டுள்ளன.
  • ஊட்டச்சத்து உணர்வு வேளாண் ஆதாரங்கள் மற்றும் புத்தாக்கம் என்ஏஆர்ஐ திட்டத்தை ஐசிஏஆர் தொடங்கியுள்ளது. வேளாண்மையை ஊட்டச்சத்துடன் இணைக்கும் குடும்ப பண்ணை முறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. 
  • மேலும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்தும் ஊட்டச்சத்து ஸ்மார்ட் கிராமங்கள், குறிப்பிட்ட இடம் சார்ந்த ஊட்டச்சத்து தோட்ட மாதிரிகளும் வேளாண் அறிவியல் மையங்களால் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. உள்ளூரிலேயே, ஆரோக்கியமான, பலவகைப்பட்ட, போதிய சிறு, குறு ஊட்டமளிக்கும் உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • இந்த செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள் மேம்படுத்தப்பட்டு, அரசின் மதிய உணவு திட்டத்திலும், அங்கன்வாடிகளிலும் இணைக்கப்படும். 
  • இயற்கையாக செறிவூட்டப்பட்ட உணவு வகைகள் மூலம் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி ஏற்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் உருவாக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel