2020 மற்றும் வரும் 2021ம் ஆண்டில் உலகப் பொருளாதார அறிக்கை சர்வதேச நிதியம் / Report on World Economy of 2020 & 2021 by International Monetary Fund - IMF


  • கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு இருக்கும் நிலையில் உலகப் பொருளாதாரம் நடப்பு 2020 மற்றும் வரும் 2021-ம் ஆண்டில் எப்படி இருக்கும் என்கிற கணிப்பு அறிக்கையை சர்வதேச நிதியம் (International Monetary Fund - IMF) வெளியிட்டுள்ளது.
  • ஜி.டி.பி-யில் இந்தியாவில் தனிநபர் ஒருவரின் ஆண்டு சராசரி வருமானம் (India's per capita GDP) 2021, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, 1,877 டாலராக (ரூபாய் மதிப்பில் 1,37,960) இருக்கும் என இப்போது ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. இது, முந்தைய கணிப்பைவிட 4.5% குறைவாகும். 
  • அதேநேரத்தில், பங்களாதேஷில் தனிநபர் ஒருவரின் ஆண்டு சராசரி வருமானம், 3.8% அதிகரித்து $1,888 டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவைவிட 11 டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ.808.50) அதிகமாகும்.
  • ஐ.எம்.எஃப். கணிப்பின்படி, தெற்கு ஆசியாவில் பாகிஸ்தான், நேபாளத்துக்கு அடுத்து இந்தியா மூன்றாவது ஏழை நாடாக இருக்கும்.
  • இந்தியாவைவிட பங்களாதேஷ், பூடான், இலங்கை, மாலத் தீவுகள் ஆகிய நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு 2020-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 4.4% சரிவடையும். அடுத்த ஆண்டு 5.5% வளர்ச்சி காணும் என ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
  • பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் எனவும் ஐ.எம்.எஃப் வெளியிட்ட இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 5.8% குறையும். ஆனால், 2021-ம் ஆண்டு 3.9% வளர்ச்சி காணும்.
  • இந்தியப் பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி - ஜி.டி.பி) நடப்பு 2020-ம் ஆண்டு 10.3% சரிவடையும். ஆனால், அடுத்த ஆண்டு 8.8% வளர்ச்சியுடன் மீண்டுஎழும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. 
  • அதன்மூலம், வேகமாக வளரும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா மீண்டும் பெறும். கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 4.2 சதவிகிதமாக இருந்தது.
  • கொரானா தொற்று நோய் முதலில் தோன்றிய சீனாவில் மட்டும்தான் நடப்பு 2020-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பாசிட்டிவாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 
  • அதாவது, சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 1.9 சதவிகிதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் சொல்லி இருக்கிறது. வரும் 2021 -ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகிதம் இருக்கும். இந்த வளர்ச்சி இந்தியாவைவிட 0.6% குறைவாகும்.

0 Comments