Type Here to Get Search Results !

TNPSC 15th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சென்னை மண்டல அஞ்சல்துறையில் விருது

 • சென்னை மண்டல அளவில், அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களை ஊக்கப்படுத்தும் வகையில், விருதுகள் வழங்கும் விழா சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ளஅம்மா மாளிகை அரங்கில் நடைபெற்றது.
 • குறிப்பாக, கரோனா நோய்த் தொற்று காலங்களிலும் சிறப்பாக சேவை வழங்கியதற்காக, சிறந்த தபால்காரா்களுக்கான விருது சென்னை கோபாலபுரம் அலுவலகத்தைச் சோந்த எம். மீனா, கோடம்பாக்கம் தபால் நிலையத்தைச் சோந்த என்.எஸ்.சக்திவேல், திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தைச் சோந்த ஜி.சுரேஷ் ஆகியோா் பெற்றனா்.
 • வருவாய் ரீதியில் சிறந்த கோட்டமாக தாம்பரம் கோட்டம் முதலிடத்தைப் பிடித்தது. சென்னை நகர தெற்கு கோட்டம் மற்றும் வேலூா் ஆகிய கோட்டங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தன. இந்த மூன்று கோட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
 • அஞ்சல் துறையில் சேமிப்பு வங்கி, காப்பீடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட துணை கோட்டமாக திருவண்ணாமலை துணைக் கோட்டம் முதலிடத்தையும், , செங்கல்பட்டு மேற்கு மற்றும் புதுச்சேரி தெற்கு ஆகிய துணைக் கோட்டங்கள் முறையே 2, 3-ஆவது இடங்களையும் பிடித்தன. 
 • இந்தக் கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், சிறந்த மாா்க்கெட்டிங் நிா்வாகிகளாக, மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.டி.சீனிவாசன் உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஒரகடத்தில் ரூ.750 கோடியில் தளவாடப்பூங்கா கிரீன்பேஸ் நிறுவனம் தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

 • ஹிரானந்தனி குழுமத்தைச் சோந்த கிரீன் பேஸ் நிறுவனம் சாா்பில், ஒரகடம் வடக்குப்பட்டுவில் ரூ.750 கோடி முதலீட்டில் தொழில்துறை மற்றும் தளவாடப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் கிரீன் பேஸ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 • தளவாடப்பூங்கா அமைப்பது மூலமாக, இந்தப் பிராந்தியத்தில் சமூக பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதோடு, பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனானு நிறுவனம் எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

 • எம்ஹெச்ஏஓ குழுமத்துடனான இந்த புரிந்துணா்வின் ஒப்பந்தம் மூலமாக யுனானு நிறுவனம் தனது தடத்தை சா்வதேச அளவில் மேலும் வலுவாக்கியுள்ளது. 
 • இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதர ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) நாடுகளுடன் சரக்கு போக்குவரத்தை சேவையை விரிவுபடுத்த வழி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசிய சரக்குப் போக்குவரத்து சந்தையில் கணிசமான பங்கை கைப்பற்ற இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும்.

மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்குகிறது இந்தியா

 • அண்மையில் ராணுவத்தளபதி மனோஜ் நரவானேவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது, ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் ஆகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது.
 • ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு

 • சங்க காலத்தோடு தொடர்புடைய ஊராக ஒக்கூர் அறியப்பட்டுள்ளது, ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இதில் புறநானூற்றுப் பாடல் மிகுந்த சிறப்புடையதாக போற்றப்படுகிறது.
 • மூதின் முல்லைத் துறையில் கெடுக சிந்தை எனத்தொடங்கும் அப்பாடல் மறக்குடி பெண்ணொருத்தி முதல் நாள் போரில் தந்தை இறந்தும் இரண்டாம் நாள் போரில் கணவன் இறந்தும் தம் குடிப் பெருமையை நிலைநாட்ட மூன்றாம் நாள் போருக்கு தெருவில் விளையாடித் திரிந்த தன் மகனை அழைத்து சீவி முடித்து சிங்காரித்து இரத்த காவி படிந்த வாளைக் கொடுத்து அனுப்பி வைத்ததாக பாடப்பெற்றுள்ளது.
 • இவ்வளவு சிறப்பு பொருந்திய புலவர் மாசாத்தியார் வாழ்விடமாக ஒக்கூர் விளங்கியிருக்கிறது. அவர் காலத்து ஈமக் காடாக இந்த கல் வட்டங்கள் இருந்திருக்கலாம்.
 • பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் முடித்து வழிபட்டு வந்தனர். இறந்த உடலை அல்லது எலும்புகளை பாதுகாக்க புதைத்து அதைச் சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. 
 • கல்திட்டை, கல்பதுக்கை, குடைக்கல், குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்றவை பெருங்கற்கால அமைப்பு முறைகளாகும். கல் வட்டங்கள் கற்பதுக்கைகள் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன.
 • ஒக்கூரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் முதன்மைச்சாலையின் கிழக்குப் பக்கத்தில் கிழக்கு மேற்காக ஓடும் ஓடையை ஒட்டிய பகுதியில் கல் வட்டங்கள் காணக்கிடைக்கின்றன. 
 • மலைப் பகுதியில் வெள்ளைக் கல்லாலும் மற்ற செம்மண் பகுதிகளில் அங்கு கிடைக்கும் செம்பூரான் கற்களாலும் கல் வட்டங்கள் அமைக்கப் பெறும் இவ்விடத்தில் இரண்டு கற்களும் கலந்து காணக்கிடைப்பது வியப்பாக உள்ளது. குத்துக்கல் ஒன்று அப்புறப்படுத்தப்பட்டு கிடைமட்டமாக கிடக்கிறது.
 • பலகைக் கற்களை நான்கு பகுதிகளிலும் குத்தாக்க நிறுத்திவைத்து அறை போல வடிவமைத்து அதில் உடலை அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்பதுக்கை என வழங்கப்படுகிறது. இந்த ஈமக்காட்டுப்பகுதியில் கற்பதுக்கை ஒன்றும் காணக்கிடைக்கிறது.
 • கல் வட்டங்களின் உள்பகுதியிலும் பின்னாளில் தனித்தும் தாழிகளில் இறந்த உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து வழிபடும் முறை இருந்தது. இப்பகுதியில் சிதைந்த தாழி ஓடுகள் மேற்பரப்பு ஆய்வில் காணக்கிடைக்கின்றன.
 • கல்வட்டம் கற்பதுக்கை தாழிகள் உள்ள ஈமக் காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபடும் முறை இன்றும் மக்களிடையே இருந்து வருகிறது. இங்கும் இன்றும் வழிபாடு நீடித்து வருவதை காணமுடிகிறது. இப்பகுதிக்கு எதிரே உள்ள பகுதியிலும் ஒரு கல் மேலச்சாலூரைச் சேர்ந்த மக்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வருகிறது.
 • தற்போது இந்த கல் வட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து கல்வட்டம் இருந்ததற்கான எச்சமாகவே வெளிப்படுகிறன்றன. சங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் கால ஈமக்காடு அறியப்பட்டதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது, மேலும் ஆய்வின்போது தொல்நடைக்குழு ஆசிரியர் நரசிம்மன் உடனிருந்தார் இவ்வாறு கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel