TNPSC 30th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

 • ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.
 • ஒலியைக் காட்டிலும் மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் இந்த அதிநவீன ஏவுகணை, 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஒடிஸாவின் பாலாசூா் கடற்கரையில் உள்ள ஒங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றாா் அவா்.
 • இந்தியாவும், ரஷியாவும் இணைந்து பிரமோஸ் ஏரோஸ்பேஸ் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம்தான் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. 
 • முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்தும், கடலில் இருந்தும், விமானத்தில் இருந்தும், கடலுக்கு அடியில் இருந்தும் இலக்குகளை நோக்கி ஏவமுடியும்.

திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி முதல்வர் துவக்கி வைப்பு

 • சென்னை மாநகராட்சியின், ஏழு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நாட்டிலேயே முதன்முறையாக, செயல்திறன் அளவீட்டு முறையில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை, தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
 • சென்னை மாநகராட்சியில், தினமும் சராசரியாக, 5,000 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக செயல்படுத்த, 19 ஆயிரத்து, 467 பணியாளர்கள், வீடு வீடாக சென்று, குப்பையை பெறுகின்றனர். 
 • அவை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையின் ஈரக் கழிவுகளில் இருந்து, இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்படுகிறது.உலர் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறு உபயோகம் மற்றும் மறு சுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
 • மீதமுள்ள குப்பை, தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இங்கு சேகரமாகும் குப்பை அளவை, படிப்படியாக குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டை தவிர்க்கவும், குப்பை கொட்டும் வளாகங்களில், 'பயோ மைனிங்' முறையில், குப்பையை பிரித்தெடுத்து, மறு சுழற்சி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
 • திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, மேலும் சிறப்பாக செயல்படுத்த, மண்டலங்களில் உள்ள தெருக்களை பெருக்குதல். வீடுகள் தோறும் தரம் பிரித்து சேகரிக்கப்படும் கழிவுகளை, அதற்குரிய பதப்படுத்தும் நிலையங்களுக்கு எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு, எட்டு ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • இந்நிறுவனம், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஓமன், பக்ரைன், பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு நாடுகளிலும், நம் நாட்டில் டில்லியிலும், துாய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 • சென்னை மாநகராட்சியின், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு. பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய, ஏழு மண்டலங்களுக்கு உட்பட்ட, 92 வார்டுகளில் உள்ள, 16 ஆயிரத்து, 621 தெருக்களில் வசிக்கும், 37 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில், துாய்மைப் பணிகள் மேற்கொள்ள, ஸ்பெயின் நிறுவனத்திற்கு, பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
 • இந்த மண்டலங்களில், ஓராண்டு காலத்திற்குள், அனைத்து வீடுகளில் இருந்தும், 100 சதவீதம் தரம் பிரிக்கப்பட்ட குப்பை, முறைப்படி பெறப்படும். இதற்காக, பழைய மிதிவண்டிக்கு பதிலாக, 'பேட்டரி'யில் இயங்கும் வாகனங்கள் பயன்படுத்தப்படும். 
 • பொது மக்களிடம் இருந்து பெறப் படும் புகார்கள் மீது, ஆறு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.10,844 பணியாளர் இந்நிறுவனம், 10 ஆயிரத்து, 844 பணியாளர்கள், 125 'கம்பாக்டர்'கள், 38 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' மற்றும் 3,000 இ- - ரிக் ஷாக்கள், 11 ஆயிரம் காம்பாக்டர் குப்பைத் தொட்டிகள் போன்ற உபகரணங்களுடன், துாய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளது.
 • இப்பணியை, நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், உதயகுமார், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

5ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

 • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 26ம் தேதி முதல் கட்ட ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அது முடிந்த நிலையில், அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அவர் நீட்டித்து வந்தார். இ
 • துவரையில் அவர் 8 முறை ஊரடங்கை நீட்டித்து இருக்கிறார். இன்று முதல் 31ம் தேதி வரை 9ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், அடுத்தடுத்து ஊரடங்கு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, நேற்று 5ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
 • பள்ளிகள், கல்லூரிகள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் தங்களின் விதிகளுக்குட்பட்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கலாம்.
 • விருப்பத்துக்கு ஏற்றார்போல் தொலைதூரக் கல்வி, இணைய வழிக்கல்வியைத் தொடரலாம்.
 • இணைய வழிக் கல்வியைப் போலவே, மாணவர்கள் வகுப்பில் நேரடியாகப் பங்கேற்க விரும்பும்பட்சத்தில் வகுப்புகளும் தொடங்க அனுமதி உண்டு.
 • மாணவர்கள் கல்வி நிலையங்களில் நேரடி வகுப்பில் பங்கேற்க பெற்றோர் அனுமதி அவசியம்.
 • வருகைப் பதிவேடு முறையில் தளர்வுகளைக் கடைபிடிக்க வேண்டும். வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயம் அல்ல.
 • உரிய பயிற்சியாளர்களைக் கொண்ட நீச்சல் குளங்களுக்கும் அக்டோபர் 15ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
 • திரையரங்குகள், மல்ட்டிபிளெக்சுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை அக்டோபர் 15ம் தேதி முதல் செயல்படலாம்.
 • திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
 • தடை செய்யப்பட்ட பகுதிகளில் தியேட்டர்களை திறப்பது உட்பட மேற்கண்ட எதற்கும் அனுமதியில்லை.
 • வர்த்தக நிறுவனங்களின் கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகளை உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம்.
 • சமூகம், கல்வி, கலை, விளையாட்டு, கலாசாரம், மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே 100 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட அனுமதி தொடர்கிறது.
 • தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்யலாம்.
 • மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 50 சதவிகிதம் வரை பங்கேற்கலாம். அதிகபட்சமாக 200 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.
 • திறந்த வெளி மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இடத்தைப் பொறுத்து ஆட்கள் பங்கேற்கலாம்.
 • விமானப் பயனங்களை வழக்கமான விதிமுறைகளுடன் தொடரலாம். சர்வதேச விமானப் பயணங்களில் சுகாதார அனுமதி வழக்கம்போல் அவசியம்.
 • கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்நலக்குறைவாக உள்ளவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தபடுகிறார்கள். அவசியமெனில் மட்டுமே பாதுகாப்புடன் பயணிக்கவும்.
 • மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய தடைகள் ஏதுமில்லை.
 • தடை செய்யப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31ம் தேதி வரையிலும் ஊரடங்கு தொடரும்.
 • மத்திய அரசின் அனுமதியின்றி உள்ளூர் ஊரடங்கை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தன்னிச்சையாக பிறப்பிக்கக் கூடாது.

இந்திய கடலோர காவல்படை "கனக்லதா பாருவா" கப்பல் கொல்கத்தாவில் இயக்கம்

 • இந்திய கடலோர காவல்படையின் "கனக்லதா பாருவா" என்ற கப்பல் கொல்கத்தாவில் இயக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன் காணொளி காட்சி மூலம் இதை தொடங்கி வைத்தார். 
 • இதன் சிறப்பம்சம், சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறனுள்ள ரோந்து கப்பலானது கடத்தல், மீட்பு நடவடிக்கைகளைச் மேற்கொள்ளவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இதன், முழு வடிவமைப்பும் இந்திய கடலோர காவல்படையால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிலையன்சில் ஜெனரல் அட்லான்டிக் முதலீடு

 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின், 0.84 சதவீத பங்குகளை, 3,675 கோடி ரூபாய்க்கு, ஜெனரல் அட்லான்டிக் வாங்க உள்ளது.
 • ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், இது மூன்றாவது தனியார் பங்கு நிறுவன முதலீடாகும். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த, சில்வர் லேக், 1.75 சதவீத பங்குகளை, 7,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 
 • அடுத்து, கே.கே.ஆர்., நிறுவனம், 1.28 சதவீத பங்குகளை, 5,550 கோடி ரூபாய்க்கு வாங்கியது.ஜெனரல் அட்லான்டிக் இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில், 6,598 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments