அரசமைப்புச் சட்டத்தின் 20ஏ திருத்தத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல்
- இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்குவதற்கு வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 20ஏ திருத்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறைந்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவின் கைகளில் அதிகாரம் குவியவுள்ளது.
- இந்த சட்டத் திருத்தத்துக்கான மசோதா, இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2 நாள்களாக நடைபெற்ற விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 156 எம்.பி.க்களும் எதிராக 65 எம்.பி.க்களும் வாக்களித்தனா்.
- இதனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத் தலைவா் மகிந்த யாப அபயவா்த்தனா கையெழுத்திட்டால், அது நாட்டின் அடிப்படைச் சட்டமாக அமலுக்கு வரும்.
- இலங்கையில் அதிபருக்கான அதிகாரங்களைக் குறைக்கவும், நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவும் அரசமைப்புச் சட்டத்தில் 19ஏ திருத்தம், கடந்த 2015-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
- இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபட்சவும், பிரதமராக அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபட்சவும் உள்ளனா்.
நவீன போர் கப்பல் INS Kavaratti இந்திய கடற்படையில் இணைப்பு
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நீர் மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு போர் கப்பலான, 'ஐ.என்.எஸ்., கவாரட்டி' கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது.
- நீர் மூழ்கி கப்பல்களை அடையாளம் கண்டு அழிக்கும் திறன் உடைய, இந்த நவீன போர் கப்பலை, கடற்படை தலைமை தளபதி, எம்.எம்.நரவானே, நம் படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்தார்.
- நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்து தாக்கும் அமைப்பை கொண்ட இந்த உள்நாட்டு போர்க்கப்பல் INS Kavaratti பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- இது எதிர் நாட்டு ரேடாரில் சிக்காத போர் கப்பல். இதன் வடிவமைப்பை, கடற்படை வடிவமைப்பு இயக்குநரகம் தயாரித்தது. இதை கொல்கத்தாவின் கார்டன் ரிசர்ச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
- INS Kavaratti போர் கப்பலில், 90 சதவீத உள்நாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதோடு, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து அதை தொடரக்கூடிய சென்சார்களும் உள்ளன. மேலும், இந்த போர் கப்பல் அது ரேடாரில் எளிதில் சிக்காது.
- 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷை பாகிஸ்தானிலிருந்து பிரிக்கும் ஆபரேஷனில் முக்கிய பங்கு வகித்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ் கவரட்டியின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
- இதன் நீளம் 109 மீட்டர் மற்றும் அகலம் 12.8 மீட்டர். இதில் 4B டீசல் என்ஜின்கள் உள்ளன. இதன் எடை 3250 டன். கடற்படையில் சேருவதன் மூலம், அணுசக்தி, வேதியியல் மற்றும் உயிரியல் நிலைமைகளில் பணிபுரியும் திறன் கொண்ட கடற்படையின் வலிமை பெரிதும் அதிகரிக்கும்.
போர்ப்ஸ் பட்டியலில் என்.டி.பி.சி., இடம் பெற்றது
- பிரபல போர்ப்ஸ் இதழ், நடப்பு ஆண்டில், உலகின் சிறந்த பணிவழங்கும் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றதுடன், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் இடத்தையும், என்.டி.பி.சி., பிடித்துள்ளது.
பீரங்கியை அழிக்கும் நாக் ஏவுகணை சோதனை வெற்றி
- ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் நாக் எனும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின் கடைசி சோதனையை நடத்தியது. அது வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ., அறிவித்துள்ளது.
- சீனாவுடனான லடாக் மோதலுக்கு பிறகு அவசர தேவை கருதி 200 ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இஸ்ரேலிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
இந்திய தடகள சம்மேளத்தின் சீனியர் தலைவராக அஞ்சு ஜார்ஜ் போட்டியின்றி தேர்வு
- டெல்லியை அடுத்த குர்கயானில் வருகிற 31 -ந் தேதி நடைபெறும் இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது.
- இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவராக அடில் சுமரிவாலா மற்றும், சீனியர் துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
- இவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் சுமரிவாலா 3-வது முறையாக தலைவராகவும், அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக சீனியர் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.