ஜி.எஸ்.டி., இழப்பீடு மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 6,000 கோடி பகிர்ந்தளிப்பு
- ஜி.எஸ்.டி., வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, சிறப்பு கடனுதவி திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்த திட்டத்திற்கு, 21 மாநிலங்களும், இரண்டு யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்தன.
- இதற்காக, ரூ.1.1 லட்சம் கோடியை கடனாக வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயை, மத்திய அரசு கடனாக வாங்கி, மாநிலங்களுக்கு நேற்று பகிர்ந்தளித்தது.
- அந்த தொகை, ஆந்திரா, அசாம், பீஹார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட, 16 மாநிலங்களுக்கும், டில்லி, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக எமி பாரெட்: செனட் குழு ஒப்புதல்
- அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல் நலக்குறைவு காரணமாக தனது 87-ஆவது வயதில் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானாா்.
- இதனால் காலியாகியுள்ள அந்தப் பொறுப்புக்கு நீதிபதி எமி கோனே பாரெட்டின் பெயரை அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தாா். எனினும், வலதுசாரி சிந்தனைகளைக் கொண்டவராக அறியப்படும் அவரது நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், பாரெட்டின் நியமனத்துக்கு செனட் சபையின் நீதிமன்ற விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதித்யா பிர்லா ஃபேஷன் நிறுவனத்தில் 1500கோடி முதலீடு செய்யும் பிளிப்கார்ட்
- இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், ஆதித்யா பிர்லா பேஷன் அண்ட் ரீடெய்ல் லிமிடெட் (ஏபிஎஃப்ஆர்எல்) நிறுவனத்தில் ரூ .1,500 கோடியை 7.8% பங்குகளுக்கு முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளாடைகள், விளையாட்டு ஆடைகள், சாதாரண உடைகள் மற்றும் பேஷன் பொருட்கள் உற்பத்தியில் இந்த முதலீடு முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏபிஎஃப்ஆர்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பிளிப்கார்ட்டின் டிஜிட்டல் சந்தை மற்றும் ஏபிஎஃப்ஆர்எல் நிறுவனத்தின் உற்பத்தி ஆகியவை ஒன்றிணையும்போது மிகப்பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று நம்பப்படுகிறது.