Type Here to Get Search Results !

TNPSC 19th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியல்

  • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல் படும் லோவி இன்ஸ்டிடியூட் ஆண்டு தோறும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன் படி, 2020-ம் ஆண்டுக்கான 'லோவி இன்ஸ்டிடியூட் ஆசிய ஆதிக்க நாடு களின் குறியீடு' வெளியிடப்பட்டது.
  • இதில் மொத்தம் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 81.6 சதவீத புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 76.1 சதவீத புள்ளிகளுடன் சீனா 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. 41 சதவீத புள்ளிகளுடன் ஜப்பான் 3-வது இடத்திலும் 39.7 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன.
  • ரஷ்யா 33.5, ஆஸ்திரேலியா 32.4, தென்கொரியா 31.6, சிங்கப்பூர் 27.4, தாய்லாந்து 20.8, மலேசியா 20.7, இந்தோனேசியா 19.9, வியட்நாம் 19.2, நியூசிலாந்து 19, தைவான் 16.7, பாகிஸ்தான் 15.2, பிலிப்பைன்ஸ் 13.3, வடகொரியா 12.3, வங்கதேசம் 9.2, புருணே 9.1, மியான்மர் 8.7, இலங்கை 8.3, கம்போடியா 7.3, லாவோஸ் 6, மங்கோலியா 5.6, நேபாளம் 4.4, பப்புவா நியூ கினியா 3.8 என்ற சதவீத புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்க பதக்கம் 

  • வென்று சாதனை படைத்துள்ளார். வங்க தேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 'ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப்' போட்டி நடந்தது.
  • கொரோனா பீதி காரணமாக இந்தப் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாடுகளில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர். 
  • இந்தியா, கொரியா, பூடான் உட்பட 6 நாடுகள் இந்த '60 ஷாட்' போட்டியில் கலந்துக் கொண்டன. பெண்கள் பிரிவில் பங்கேற்ற உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இளவேனில் வாலறிவன்(இந்தியா) 627.5புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார்.
  • இந்த பிரிவில் 622.6 புள்ளிகள் எடுத்த ஜப்பான் வீராங்கனை ஷியோரி ஹிராட்டா வெள்ளி, 621.1புள்ளிகள் சேர்த்த இந்தோனேஷிய வீராங்கனை வித்யா டோயிபா வெண்கலமும் வென்றனர். 
  • ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஷாகு துசார் மானே 623.8 புள்ளிகள் சேர்த்து 2வது இடம் பிடித்ததால் வெள்ளி வென்றார். இந்த பிரிவில் 630.9 புள்ளிகள் குவித்த ஜப்பான் வீரர் நவோயா ஒகடா தங்கமும், வங்க தேச வீரர் பாகி அப்துல்லா 617.3 புள்ளிகள் எடுத்து வெண்கலமும் கைப்பற்றினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel