Type Here to Get Search Results !

TNPSC 12th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகத்தில் 10,000 கோடி முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து

  • சென்னை, காஞ்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க தொழில்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது.
  • இத்திட்டங்களின் மூலம் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31 ஆயிரத்து 464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டு உள்ளன. தற்போது 14 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ.6,300 கோடி முதலீட்டில், 2,420 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜேஎஸ்டபுள்யூ நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்;
  • ஸ்பெயின் நாட்டின் மந்த்ரா டேட்டா செண்டர்ஸ் நிறுவனம், சென்னைக்கு அருகில் ரூ.750 கோடி முதலீட்டில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டம்; ஆசெங் ஹைடெக் நிறுவனம் ரூ.200 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கார்பன் பைபர் தகடுகள் உற்பத்தி திட்டம்
  • சிங்கப்பூர் வேன்ஸ் கெமிஸ்ட்ரி நிறுவனம் ரூ.50 கோடி முதலீட்டில் 750 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங் களை சுத்திகரித்தல் திட்டம்;
  • காஞ்சீபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் அபோல்லோ டயர்ஸ் நிறுவனம் ரூ.505 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • ஒரகடத்தில் ஹிரநந்தனி குழுமத்தைச் சேர்ந்த கிரீன்பேஸ் இண்டஸ்டிரியல் பார்க் நிறுவனம் ரூ.750 கோடிமுதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்காவின் டிபிஐ காம்போசிட்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 'விண்ட் பிளேட்' உற்பத்தி விரிவாக்க திட்டம்;
  • எல்ஐ எனர்ஜி நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் 325 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் உற்பத்தி திட்டம்;
  • ஸ்ரீபெரும்புதூரில் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் ரூ.109 கோடி முதலீட்டில் 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்;
  • நெல்லை மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் பிரிட்டானியா நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிஸ்கட் தயாரிக்கும் விரிவாக்கத்திட்டம்;
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஐனாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி முதலீட்டில் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி திட்டம்;
  • சென்னை அம்பத்தூரில் கிரின் டெக் மோட்டார்ஸ் அண்டு சர்வீசஸ் நிறுவனம் ரூ.90 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பேட்டரி மற்றும் பி.எம்.எஸ் உற்பத்தி செய்யும் திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தென் கொரியாவின் எல்.எஸ். ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ.250 கோடியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மோட்டார் வாகனங்களுக்கான 'சுவிட்ச்' உற்பத்தி திட்டம்;
  • திருவள்ளூர் மாவட்டத்தில் கவ்ண்டர் மெசர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.51 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் உற்பத்தி திட்டம், என மொத்தம் 14 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில், சில நிறுவனங்களுடன் காணொலிக்காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மாநிலங்களுக்கு ₹.12,000 கோடி கடன் மத்திய அரசு அறிவிப்பு

  • கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க மாநில அரசுகளுக்கு ரூ. 12,000 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்குவதாகவும், அதனை திருப்பி செலுத்த 50 ஆண்டு கால அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • இந்த நிதியில் ரூ.1,600 கோடி வடகிழக்கு மாநிலங்களுக்கும், ரூ. 900 கோடி உத்தரகாண்ட், இமாச்சல் மாநிலங்களுக்கும், ரூ. 2,000 கோடி மாநிலங்கள் முன்கூட்டியே அறிவித்த திட்டங்களுக்கும், மீதமுள்ள ரூ. 7,500 கோடி இதர மாநிலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

என்.பி.ஏ. கூடைப்பந்து லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் 17-வது முறையாக சாம்பியன்

  • கொரோனா பாதிப்புக்கு இடையே அமெரிக்காவில் நடைபெற்று வந்த என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டியில் இறுதிப்போட்டி நடைபெற்றது. லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் மியாமி ஹீட் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் 106-93 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் 7 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியை 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று 17-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 
  • அத்துடன் இந்த போட்டியில் அதிக முறை பட்டம் வென்று இருந்த போஸ்டன் செல்டிக்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.

விஜயராஜே சிந்தியா நினைவு தினம் ரூ.100 சிறப்பு நாணயம் பிரதமர் வெளியிட்டார்

  • மறைந்த பாஜ தலைவரான விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ.100 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மறைந்த பாஜ தலைவரான விஜயராஜே சிந்தியா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. 

கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை ஆசிரியம் 'கல்வெட்டு' முதல் முதலாக மதுரையில் கண்டுபிடிப்பு

  • மதுரையில் கி.பி.13-14ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
  • இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென பாடிகாவல் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. பாடிகாவல் செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோயில் நிர்வாகம், பொது நிகழ்வுகளை முன்னெடுத்தல் ஆகிய உரிமைகளையும் பெற்றிருந்தனர். 
  • பாதுகாப்புத் தந்து காவல் செய்யும் பாடிகாவல் உரிமை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் அதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை 'ஆசிரியம் கொடுத்தல்' என்கிறார்கள். 'ஆசிரியம்' என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள்.
  • இச்சொல் 'ஆசிரயம்', 'ஆச்சரயம்', 'ஆஸ்ரீயம்' என மாறுபட்ட உச்சரிப்புகளுடன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 75க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் கிடைக்கும் இவ்வகை கல்வெட்டுகள் சிலவரிகள் கொண்டதாகவும், தனி பலகை கற்களில் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. 
  • பாடிகாவல் முறையில், கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல் காத்து வருவதை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ, மையப்பகுதியிலோ, கோயில்களிலோ நட்டு வைப்பது வழக்கம்.
  • கூடல் செங்குளம் கண்மாயில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, மூன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலமுள்ள கற்பலகையில், 'பாடி நகரத்தேவர் கண்டிய தேவராஸ்ரீயம்' என 5 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. 
  • கல்லின் மேல்பகுதி உடைந்தநிலையில் உள்ளதால் இதன் முதல் வரி சிதைந்துள்ளது. இதில் சொல்லப்படும் பாடி, 'கொம்பாடி' யாக இருக்கலாம். இதன்மூலம் கொம்பாடி என்ற நகரத்துக்கு கண்டியதேவர் என்பவர் பாடிகாவலாக இருந்ததை உறுதிப்படுத்தி ஆசிரியம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. 
  • இதன் கீழ்ப்பகுதியில் முக்காலி மீது பூர்ணகும்பமும், இருபக்கமும் குத்து விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு ஆகும். 
பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறை வங்கதேச அமைச்சரவை ஒப்புதல் 
  • ஆசிய நாடுகளில் ஒன்றும், இந்தியாவின் அருகே அமைந்திருக்கும் நாடான வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி செய்து வருகிறார். 
  • இவர், அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, இந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை கலிதா ஜியாவைச் சேரும்.
  • பெண் தலைவர்கள் ஆட்சி செய்ததாலும்; செய்வதாலும் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படும் பெண்களின் துயரமும் வலியும் அவர்களுக்குத் புரியும்.
  • பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகப்பட்சத் தண்டனை மரண தண்டனைதான். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் நிறைவேற்றியப் பின்னர் அதிபர் அப்துல் ஹமீத், தற்போது பாலியல் வன்புணர்வ குற்றங்களில் ஆயுள் தண்டனை பெறுவோரை மரண தண்டனை பெறுவோராக அறிவித்து விடுவார்.
  • சமீபத்தில், வங்கதேசத்தில் பெண்களுக்கெதிராக தொடர்ச்சியாக நடந்த பாலியல் வன்புண்ர்வு குற்றங்களே, இச்சட்டத்தை கொண்டவரக் காரணம் என்று கூறுப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel