இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு `நீலக்கொடி' சான்றிதழ் / 8 Indian Beaches Awarded Blue Flag Certification

  • கடற்கரைப் பகுதியின் தூய்மை, பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்று பல தகுதிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்படுகிறது.
  • டென்மார்க்கின் கோபன்ஹேகனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE- Foundation for Environmental Education) இந்த தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.
  • ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி கடற்கரை, குஜராத்திலுள்ள ஷிவ்ராஜ்பூர் கடற்கரை, யூனியன் பிரதேசம் டையூவிலுள்ள கோக்லா கடற்கரை, கர்நாடகாவிலுள்ள காசர்கோடு கடற்கரை, கர்நாடகாவிலுள்ள படுபிர்டி கடற்கரை, கேரளாவிலுள்ள கப்பாடு கடற்கரை, ஆந்திராவிலுள்ள ருஷிகொண்டா கடற்கரை மற்றும் அந்தமானிலுள்ள ராதாநகர் ஆகியவைதான் இந்த மதிப்புமிக்க சான்றிதழைப் பெற்ற கடற்கரைகள்.
  • உலகில் உள்ள சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த 4,600-க்கும் மேற்பட்ட கடற்கரைகள் இதுவரை நீலக்கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன. ஸ்பெயினில் அதிக எண்ணிக்கையிலான நீலக்கொடி குறிக்கப்பட்ட தளங்கள் உள்ளன. 
  • 2018-ம் ஆண்டில் நீலக்கொடி அந்தஸ்தைப் பெறுவதற்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிலுள்ள இதுபோன்ற 100 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • தற்போது நீலக்கொடி அந்தஸ்தைப் பெற்றுள்ள இந்தியக் கடற்கரைகளின் பட்டியலில், தமிழகத்திலிருந்து ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 கடற்கரைகளில் 5 கடற்கரைகள் அரபிக் கடலில் உள்ளன.

0 Comments