இந்தியாவில் ஓய்வு கால வாழ்க்கைக்கு ஏற்ற நகரம் / List of ideal city for leisure life in India

  • ஓய்வுக்குப் பின் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் இடம் பெற்றுள்ள ஐந்து நகரங்களில் கோவை மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
  • 'டுமாரோ மேக்கர்ஸ்' என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. 
  • இந்த நிறுவனம், ஓய்வு காலத்தில் வாழ்வதற்கேற்ற சிறந்த நகரங்கள் குறித்து சமீபத்தில் தேசிய அளவிலான ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. வாழ்க்கைத்தரம், மருத்துவம், போக்குவரத்து வசதிகள், குற்ற விகிதம் மற்றும் சீதோஷ்ண நிலை ஆகிய ஐந்து விஷயங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 
  • விலைவாசி, வாடகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில், ஐந்து நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இதில், சண்டிகார், முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிராவின் புனே நகரம், இரண்டாவது இடத்தில் உள்ளது. 
  • கோவை மாநகரம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை தெலங்கானா தலைநகரம் ஹைதராபாதும், உத்தரகண்ட் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகராக விளங்கும் டேராடூனும் பிடித்துள்ளன.
  • குறிப்பாக, 64 சதவீத இந்தியர்களுக்கு, தங்களுடைய ஓய்வு கால வருவாய் இலக்கு குறித்த அச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த நிறுவனம், சென்னையை விட நுகர்பொருட்களின் விலை, கோவையில், 19 சதவீதம் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
  • தேசிய குற்றப்பதிவேடு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரப்படி, குற்றவியல் விகிதம் க்ரைம் ரேட் தேசிய சராசரியை விட சற்று அதிகமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 Comments