Type Here to Get Search Results !

TNPSC 9th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் 2வது பட்டியல் ஒப்பந்தப்படி மத்திய அரசிடம் பகிர்ந்தது சுவிட்சர்லாந்து

  • இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தானியங்கி முறையில் தகவல் பரிவர்த்தனை செய்து கொள்ளும் விதிமுறையின் கீழ் இந்தப் பட்டியல் அளிக்கப்பட் டுள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. சர்வதேச நிதி கணக்கியல் தகவல் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப் படையில் அந்நாட்டில் பணத்தை பதுக்கியுள்ளவர்கள் விவரத்தை அந்தந்த நாடுகளுக்கு அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
  • கடந்த ஆண்டு செப்டம்பரில் சுவிட்சர்லாந்திடம் இருந்து முதலா வது விவரப் பட்டியல் மத்திய அரசுக்கு கிடைத்தது. இந்த ஆண்டு பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்களின் அடிப்படையில் சுவிஸ் வங்கி மூலம் பகிரப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 31 லட்சமாகும். கடந்த ஆண்டு 75 நாடுகளிடையே, இதே எண்ணிக்கையிலான கணக்குகள்தான் பகிரப்பட்டுள்ளன.
  • பகிரப்பட்ட கணக்குகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களா, மொத்தம் தொகை எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுவிஸ் வங்கி மற்றும் பிற சுவிஸ் நிதி நிறுவனங்களில் செலுத் தப்பட்ட பண விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம்பெற் றுள்ளவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • நிதி முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கியவர்கள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட விசாரணை அடிப் படையில் இந்த விவரங்கள் கோரி பெறப்பட்டன. இவ்விதம் பெறப் பட்ட விவரங்கள் அனைத்துமே 2018-ம் ஆண்டுக்கு முன்பு கணக்கை முடித்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றியதாகும்.
  • நிதி பதுக்கல் முறைகேடு தொடர் பான பல வழக்குகள் பனாமா, பிரிட் டிஷ் வர்ஜின் தீவுகள் மற்றும் கேமன் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்கள் தொடர்புடையவையாகும். இது தவிர பெரும் கோடீஸ்வரர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச வம்சத்தினர் உள் ளிட்டோர் பதுக்கிய பண விவரங்கள் சார்ந்த வழங்குகளாகும்.
  • பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் விவரம், தொடர்புள்ள சொத்து மதிப்பு, கணக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த விவரங்களை வெளியிடக் கூடாது என்று இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதன் அடிப்படையில் அரசிடம் அளிக்கப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
  • சுவிஸ் அதிகாரிகள் அளித் துள்ள விவர பட்டியலில் பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரம், அவர்களின் கணக்குகள், போடப் பட்ட பண மதிப்பு, முகவரி, நாடு, வரி குறியீடு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
  • இவ்விதம் தரப்பட்டுள்ள விவரங் களின் அடிப்படையில், சம்பந்தப் பட்டவர்கள் செலுத்திய வரி விவரம் உள்ளிட்டவற்றை வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர். சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய விவரங்களை தாக்கல் செய்து அதற்குரிய வரி செலுத்தியுள்ளனரா என்பதும் ஆராயப்படும். அடுத்த விவரப்பட்டியல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிடைக்கும்.
  • ஏற்கெனவே இந்தப் பட்டியலில் 75 நாடுகள் இடம்பெற்றிருந்தன. தற்போது புதிதாக அங்குய்லா, அருபா, பஹாமாஸ், பஹ்ரைன், கிரெனடா, இஸ்ரேல், குவைத், மார்ஷல் தீவுகள், நவ்ரு, பனாமா, ஐக் கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 11 நாடுகள் சேர்ந்துள்ளதால் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகளுக்கு இந்த விவர பட்டியல் அளிக்கப்பட வேண்டும்.
  • சுவிஸ் பெடரல் வரி அமைப் புடன் (எப்டிஏ) 66 நாடுகள்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி பரஸ்பரம் 66 நாடுகளும் தங்களிடையிலான வர்த்தகம் மட்டுமின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள இது வழிவகுக்கிறது. 
  • எஞ்சியுள்ள 20 நாடுகளிடம் இருந்து சுவிஸ் அரசுக்கு கோரிக்கை வந்த போதிலும் அவை சர்வதேச விதி முறைகளை கடைபிடிக்கவில்லை என்பதால் அவற்றுக்கு வழங்கப்பட வில்லை. தகவல் பாதுகாப்பு (9 நாடுகள்), தகவல் தொகுப்புகளை பெற விரும்பாத நாடுகள் (11) என்ற அடிப்படையில் இவற்றுக்கு விவரங்களை சுவிஸ் அரசு வழங்கவில்லை.
  • தற்போது 8,500 நிதி நிறுவனங்கள் (வங்கிகள், அறக்கட்டளைகள், காப்பீடுதாரர்கள்), தாராள வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் பதிவு செய்துள்ளன. இவை தகவலை திரட்டி அதை எப்டிஏ-வுக்கு அளிக்கும். கடந்த ஆண்டு இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 7,500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இதுவரை 31 லட்சம் நிதி கணக்குகள் குறித்த விவரங்களை எப்டிஏ பகிர்ந்துள்ளது. இந்த விவரங்களில் அதில் சம்பந்தப்பட்டுள்ள நிதி மற்றும் சொத்து விவரங்கள் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச நிதி தகவல் பகிர்வு தர மதிப்பின்படி தகவல்களை அளிக்க சுவிஸ் அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி, 2017-ம் ஆண்டிலிருந்து எப்டிஏவுடன் ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய் துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 'கோவாக்ஸ்' கூட்டணியில் சீனா

  • கோவாக்ஸ் திட்டத்தில் சீனா அதிகாரப்பூா்வமாக இணைவதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் சீன அரசும் தடுப்பு மருந்துகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான சா்வதேசக் கூட்டணி (கவி) அமைப்பும் கையெழுத்திட்டுள்ளன.
  • அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதிகள் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்ற கோட்ப்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் சீனா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை இதுவாகும்.
  • கரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் சரிசமமாக விநியோகிக்கப்படுவதில் சீனா கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சீனாவின் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் வளரும் நாடுகளைவிட வளா்ச்சியடைந்த நாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறான கருத்து,
  • தற்போதைய நிலையில், கரோனா நோய்த்தொற்றுஉலகின் அனைத்து நாடுகளையும் சோந்த அனைவருக்கும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
  • எனவே, எங்களது தடுப்பூசிகள் பாரபட்சமின்றி, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு விநியோகக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

'ருத்ரம்'ஏவுகணை சோதனை வெற்றி

  • மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், 'ருத்ரம்' என்ற அதிநவீன கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கி உள்ளது.
  • இந்த ஏவுகணை சோதனை நேற்று நடந்தது. இந்த ஏவுகணை, 'சுகோய் - 30' போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டது. திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்தது. 
  • ருத்ரம், பல்வேறு கோணங்களில் இருந்து, எதிரிகளின், 'ரடார்' மற்றும் தொலைதொடர்பு சாதனம், கண்காணிப்பு சாதனம் ஆகியவற்றை மீறி, துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் பெற்றது.
  • முதன் முறையாக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ருத்ரம் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை,140 கிலோ எடை உடையது. 100 - 150 கி.மீ., தொலைவில் உள்ள எதிரியின் இலக்கை தாக்கும் ஆற்றல் உடையது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 9.5% சரியும் கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடத்துகிறது. இதில் இடம்பெற்றுள்ள 6 உறுப்பினர்களில், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 
  • 6 உறுப்பினர்களில் 3 பேர் ரிசர்வ் வங்கியில் இருந்தும், 3 பேர் அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர்களும் இடம்பெறுவார்கள். கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை உள்ளது. 
  • பொருளாதார நிபுணர்களின் பதவிக்காலம் முடிவடைந்தும் புதிய உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கவில்லை. இதனால், முதல் முறையாக, 25வது நிதிக்கொள்கைக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த ரிசர்வ் வங்கி, 3 பேர் நியமனத்துக்குப் பிறகு கடந்த 7ம் தேதி, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் துவங்கியது.
  • நிதிக்கொள்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் தேவையில்லை என ஒரு மனதாக கருத்து தெரிவித்துள்ளனர். 
  • அதன்படி, குறுகியகால கடன் வட்டியான ரெப்போவட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 4 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதம் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பண வீக்கம் ரிசர்வ் 4 சதவீதமாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த பண வீக்கம் அதிகபட்சமாக 6 சதவீதமாகவும் குறைந்த பட்சமாக 2 சதவீதமாகவும் இருக்கலாம். நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குள் வர வாய்ப்புகள் உள்ளன. 
  • ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்ப என்இஎப்டி பரிவர்த்தனை வசதி உள்ளது. இதுபோல் மொபைல் போன் மூலம் யுபிஐ முறையில் பணம் அனுப்பப முடியும். இருப்பினும் அதிக மதிப்பிலான உடனடி பணப் பரிவர்த்தனைகளை ஆர்டிஜிஎஸ் மூலமாக வர்த்தகர்கள் மேற்கொள்கின்றனர். 
  • குறைந்தபட்சம் ₹2 லட்சம் முதல் அதிகபட்சம் ₹10 லட்சம் வரை பணம் அனுப்பலாம். தற்போது இந்த வசதியை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை வங்கி வேலை நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • வங்கி வார விடுமுறை நாட்கள், 2வது, 4வது சனிக்கிழமைகளில் இந்த வசதி கிடையாது. இந்நிலையில் வர்த்தகர்கள், நிறுவனங்கள் பலன் பெறும் வகையில், அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் இந்த வசதியை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் இந்த வசதி அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு
  • பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பஸ்வான் வியாழக்கிழமை புதுதில்லியில் காலமானார்.
  • இந்நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் பொறுப்பு வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பணிகளை கூடுதலாக அமைச்சர் பியூஷ் கோயல் கவனித்துக் கொள்வார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel