- உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
- அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
- இந்நிலையில், இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு, ஐ.நா.,வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதும், 88 நாடுகளில், வறுமையில் வாடும் நபர்களுக்கு, 53 ஆண்டுகளாக உணவு அளித்து வந்துள்ளது.
- பசிப்பிணி போக்குதல் மற்றும் போரைத் தவிர்த்து அமைதியை காப்பதால், இந்த விருதுக்கு, உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.