2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (NOBEL PRIZE FOR LITERATURE 2020)

 

  • எளிமையான அழகியலுடன் கவிதை புனையும் திறன் கொண்ட லூசி க்ளூக்குக்கு, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அவரின் கவிதை வரிகள் அனைத்தும் தெள்ளிய தன்மை கொண்டதாக இருக்கும். எளிமையும், விளையாட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அவரின் எழுத்துக்களில் வெளிப்படும்.
  • அவரின் படைப்புகள் அனைத்தும் குறை கண்டறிய முடியாததாக உள்ளன. நோமையான, வெளிப்படையான, சமரசம் செய்துகொள்ளாத எழுத்துக்கள் மூலம் அவா் தன்னை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறாா்.
  • கப் பெரிய இழப்புணா்வுகளில் இருந்தும் மாபெரும் முன்னேற்றத்தை அடையும் பெருமாற்றங்கள் குறித்து அவரின் படைப்புகள் விவரிக்கின்றன.
  • சோகமான குடும்ப வாழ்க்கையின் துன்பங்களைக்கூட அவா் நெருடும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவா் என்று நோபல் தோவுக் குழு தெரிவித்துள்ளது.
  • நியூயாா்க்கில் கடந்த 1943-ஆம் ஆண்டு பிறந்த லூசி க்ளூக், சிறுவயதில் 'அனோரெக்ஸியா' என்ற நோயால் அவதிப்பட்டாா். உணவு உண்ண முடியாமல் அவதியை ஏற்படுத்தும் அந்த நோய் மற்றும் அதற்கான சிகிச்சை தந்த அனுபவம், பிற்காலத்தில் அவரின் படைப்புகளைக் கட்டமைத்ததாகக் கூறப்படுகிறது.
  • ஏற்கெனவே, கவிதைக்கான புலிட்சா் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

0 Comments