Type Here to Get Search Results !

TNPSC 7th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் பயிற்சி வழங்க இந்தியன் வங்கியின் 'பிரேரணா' திட்டம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி, மேலாண்மை குறித்த பயிற்சியை தமிழில் வழங்குவதற்காக, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ள 'எம்எஸ்எம்இ பிரேரணா' என்ற திட்டத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நிதி, மேலாண்மை குறித்த பயிற்சியை உள்ளூர் மொழியில் வழங்கும் விதமாக, 'எம்எஸ்எம்இ பிரேரணா'என்ற திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், தங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களுக்கு அவர்கள் எளிதில் தீர்வு காண முடியும்.
  • 'பூர்ணதா' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பயிற்சியை பெறும் நிறுவனங்களுக்கு பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

இயற்கை எரிவாயு சந்தைக்கு முழு சுதந்திரம்: மத்திய அரசு அனுமதி

  • பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, இயற்கை எரிவாயு சந்தையை சீர்திருத்தும் வகையில், அவற்றிற்கு முழுமையான சந்தை சுதந்திரத்தை வழங்கியுள்ளது. 
  • இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் நடத்துவதை எளிமையாக்கும் வகையிலும் மத்திய அரசு அத்துறையில் தொடர்ச்சியாக சீர்திருத்தத்தை செய்து வருகிறது. 
  • அதன் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இயற்கை எரிவாயு விற்பனையில் வெளிப்படையான போட்டி முறையை ஏற்படுத்த சுதந்திரமான சந்தையை அனுமதித்துள்ளது. 
  • இதற்காக மின் ஏல நடைமுறைக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இது வெளிப்படையான போட்டியை ஊக்குவிக்கும் என பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஆபத்து விளைவிக்கும் 7 ரசாயனத்துக்கு தடை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் ஸ்டால்க்ஹோம் மாநாட்டில் 7 ஆபத்தான ரசாயனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த 7 ரசாயனங்களும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதால் தடை விதிக்கப்பட்டவை. சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு உள்ள உறுதியை காட்டுகிறது. தடை செய்யப்பட்டுள்ள 7 பூச்சிக்கொல்லி ரசாயனங்களை பயன்படுத்துவதால், கேன்சர், உறுப்புகள் செயலிழப்பு, நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்கட்டாவில் கிழக்கு-மேற்கு மெட்ரோ நடைபாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மேற்கு வங்கத்தின் தலைநகரான கோல்கட்டாவில், போக்குவரத்து முறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரூ. 8,575 கோடியில் கிழக்கு - மேற்கு மெட்ரோ நடைபாதை திட்டத்தை முடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அக்.,7 மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். 
  • இதில் ரயில்வே அமைச்சகத்தின் பங்கு ரூ.3,268.27 கோடியாகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் பங்கு ரூ.1148.31 கோடியாகவும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ. 4158.40 கோடியாகவும் உள்ளது. இது கோல்கட்டாவில் ஹவுராவுக்கும், சாக்லேட் லேக் நகரத்திற்கும் இடையில் சிறந்த போக்குவரத்து இணைப்பை உருவாக்க திட்டமிட்டது
  • கிழக்கு-மேற்கு மெட்ரோ நடைபாதை திட்டத்தின் மொத்த பாதை நீளம் 12 நிலையங்களைக் கொண்ட 16.6 கி.மீ ஆகும். இந்த திட்டம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
  • நகரத்தின் பயணிகளுக்கு போக்குவரத்தை மிக எளிதாக்கும். நகர்ப்புற இணைப்பை மேம்படுத்தும் மற்றும் லட்சக் கணக்கானவர்களுக்கு தூய்மையான இயக்கம் தீர்வை வழங்கும். இந்த மெட்ரோ நடைபாதை திட்டம் 2021 டிச., மாதத்துக்குள் முடியும். இது கோல்கட்ட நகர பயணிகளுக்கு பயனளிக்கும்.
விலங்கியல் கணக்கெடுப்புக்கு புதிய ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு மற்றும் இன்டர்நேஷனல் பார்கோட் ஆஃப் லைஃப் ஆகியவற்றுக்கு இடையான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் துணை அமைப்பான இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பு மற்றும் கனடா நாட்டை சேர்ந்த லாப நோக்கில்லாத அமைப்பான இன்டர்நேஷனல் பார்கோட் ஆப் லைப் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் 2020 ஜூன் மாதத்தில் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயிரினங்கள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு, பட்டியலிடப்படும். இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பால் சர்வதேச திட்டங்களில் இதன் மூலம் பங்கு பெற முடியும்.
இந்தியா - ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இணைய பாதுகாப்புத் துறையில் திறன் மேம்படுத்துதல், முக்கிய உள்கட்டமைப்புகளை பாதுகாத்தல், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல் மற்றும் இணைய வழிக் குற்றங்களை தடுப்பதற்கான வழி முறைகள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றை இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்திற்கேற்ப மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
  • புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், வர்த்தகத் துறையின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பு மற்றும் நம்பகமான இணைய சுற்றுச் சூழலை உருவாக்க இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் உறுதி பூண்டுள்ளன.
  • இந்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் உட்பட உலக அரங்கில் இணைந்து செயல்படவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வியூகங்களைப் பகிரவும், ‌அரசு மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு இடையே பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுதவும், இணைய ஆளுமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளன.
பெருங்குடி, நெசப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உலக வங்கி ரூ.900 கோடி கடன் வழங்க ஒப்புதல்
  • சென்னை பகுதிகளின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களை பெருக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி நெமிலியில் நடைபெறுகிறது. மேலும் மாமல்லபுரம் அருகே தினமும் 400 மில்லி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
  • மேலும் கழிவுநீரை குடிப்பதற்கு ஏற்ற நிலையில் சுத்திகரித்து போரூர், பெருங்குடி ஏரிகளை விடுவதற்கான கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. பணிகள் முடிவடைந்ததும் வரும் ஜனவரி முதல் தினமும் தலா ஒரு கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மேற்கண்ட ஏரிகளில் விடப்படும்.
  • ஏரிகளில் விடப்படும் தண்ணீர் இயற்கையாகவும், சுத்திகரிப்பாகும். ஏரிகளை சுற்றியுள்ள பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் வாரியம் வழங்கும் குடிநீர் தேவையும் குறையும். தேவைப்படும் போது சென்னை பகுதியில் குடிநீர் தேவைக்கும் ஏரி நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இது போன்ற திட்டங்களுக்கு இங்கிலாந்து தூதரகம் மற்றும் உலக வங்கியும் முன்னுரிமை அடிப்படை உதவ முன்வந்துள்ளன.அதன்படி பெருங்குடி ஏரியில் 60 மில்லியன் லிட்டர், நெசப்பாக்கம் 50 மில்லியன் லிட்டர் என ஆக மொத்தம் 110 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு இயக்குவதற்கான திட்ட அறிக்கை தயார் ஆகிவிட்டது. 
  • இத்திட்டத்திற்கு உலக வங்கி ரூ.900 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதைக் கொண்டு ஏரிகள் விரிவாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறும்.
காது கேளாத குழந்தைகளுக்கு சைகை மொழியில் பாடப்புத்தகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • காது கேளாத குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கல்விப் பொருட்களை வழங்குவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
  • இதனை, மத்திய சமூக நீதி அமைச்சர் கெஹ்லோட் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோரின் டிஜிட்டல் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்திய சைகை மொழியில் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள் கிடைப்பதால் காது கேளாத குழந்தைகளுக்கு கல்வி வளங்களை இப்போது அணுக முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel