Friday, 9 October 2020

TNPSC 8th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கனடா மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி

 • பிரதமர் மோடி தற்போது காணொளி மூலம் பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் அவர் கலந்து கொண்டிருக்கிறார் தற்போது அவர் காணொளி மூலம் உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 • இந்த மாநாட்டில் அவர் பேசியபோது 'வங்கி, காப்பீடு நிறுவனங்கள், முதலீடு நிதியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு குறித்து பேசினார். மேலும் தொழில் முனைவோர் மற்றும் கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டிய சூழல் உண்டாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 • விவசாயத்துறையில் கொண்டு வந்துள்ள மாற்றத்தின் காரணமாக விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் அதுமட்டுமின்றி இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்
 • உற்பத்தி முனைவோர் துறையில் முதலீடு செய்ய கனடா நாட்டவர்கள் முன்வர வேண்டுமென்றும் அதற்கு சிறப்பான இடம் இந்தியா என்றும் அவர் தெரிவித்தார் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சத்தின் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பதாகவும் அவர் தனது உரையில் கூறினார்
சூரிய சுய வேலைவாய்ப்பு திட்டம்
 • கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் பல்வேறு தரப்பினர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் திரிவேந்திர சிங் தொடக்கி தலைமைச் செயலகத்தில் வைத்துள்ளார்.
 • முதல்வரின் சூரிய சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • வேலைவாய்ப்புகள் உருவாவதுடன் மட்டுமல்லாமல், பசுமை திட்டத்தின் கீழ் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையும் ஊக்குவிக்கப்படுகிறது.
 • முதல்வர் சூரிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்வாலம்பன் யோஜனா திட்டத்தின் பலன்களும் கிடைக்கும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய விமானப்படை தினத்தையொட்டி, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நிகழ்ச்சிகள்
 • இந்திய விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. 
 • அவ்வகையில் இன்று 88-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய விமானப்படை தினத்தையொட்டி, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின. 
 • முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. 
 • அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் முதலில் பறந்து சாசகம் செய்தது. அதன்பின்னர் ரபேல் உள்ளிட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
 • ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது. நிகழ்ச்சியில், தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. 
உலகின் 3 வது சிறந்த இடமாக அறிவிக்கப்பட்ட உலுரு தேசிய பூங்கா
 • ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தின் புனித தளமான உலுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா உலகின் மூன்றாவது சிறந்த இடங்களாக பார்க்கப்பட்டது.
 • 2020 வருட லோன்லி பிளானட்டின் உலகில் காணக்கூடிய சிறந்த இடங்களின் பட்டியலில் இதுவும் இடம்பெற்றது. இது, உலகளாவிய பயண வழிகாட்டியின் 'அல்டிமேட் டிராவல் லிஸ்ட்' புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • உலுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா, பழங்குடியின கலாச்சாரத்துடன் பயணிகளை இணைக்கும் திறனுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 
 • மேலும், உலக பாரம்பரிய தளமான உலுரு, பெரிய மணற்கல் பாறை உருவாக்கம், அதன் பழங்குடி மக்களுக்கு ஆன்மீகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment