Type Here to Get Search Results !

TNPSC 8th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இணையதள சேவைகளை மேம்படுத்த, தகவல் பாதுகாப்புக்காக ரூ.96 கோடியில் உருவாக்கப்பட்ட 2-வது தரவு மையம், இணையதளம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • அரசு துறைகள் தங்கள் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை மக்களுக்கு அதிக அளவில்அளிக்க, தமிழகத்தின் 2-வது மாநிலதரவு மையம் அமைக்கப்படும்' என்று மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். 
  • அதன்படி, சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74.69 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 2வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தார்.
  • 195 அடுக்குகள் (ரேக்ஸ்) கொண்ட இந்த தரவு மையம், தமிழகஅரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த உதவும்.
  • மேலும், அரசு துறைகளுக்கு இடையே, அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, அரசுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையே இணையதள சேவைகளை வழங்கவும், அரசு துறைகளின்தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
  • இதன் முதல்கட்டமாக, நவீன கணினி உருவாக்க மையம் (Centre for Development of Advanced Computing C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ள கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (CERT-TN) இணையதளத்தை (https://cert.tn.gov.in) முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தின் எல்லா அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் இக்குழு முக்கிய பங்கு வகிக்கும்.
  • இணைய தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயனுள்ள இணைய பாதுகாப்பு தகவல் மற்றும் கருத்து கேட்பு ஆகிய வசதிகளை வழங்கும் விதத்தில் இந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள், அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா '5ஜி' கூட்டு தொழில்நுட்பம் 

  • அதிவேக தொலைத் தொடர்பு சேவைக்கான '5ஜி' தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்துள்ளன. புதிய தொழில்நுட்பம், நீர், வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
  • அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, இந்தியாவின் பெங்களூரு, இஸ்ரேலின், டெல் அவிவ் நகரங்கள், புதுமையான தொழில்நுட்பங்களின் மையங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. 

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பதினெண் கீழ்க்கணக்கு பாடல்கள்

  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட, 1,837 பாடல்களின், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிப்பெயர்ப்பு நுால்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் வெளியிட்டார். 
  • பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட நுால்கள், உலக மொழிகளான, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகியவற்றிலும், மொழி பெயர்க்கப்படும். 
  • இப்பணிகளை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும்' என, 2016 செப்., 13ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.
  • இதை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், 15.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், முதல்கட்டமாக, பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், தேர்வு செய்யப்பட்ட, 1,837 பாடல்களின், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி பெயர்ப்பு நுால்களை, பிப்., 19ல், முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.
  • அதன் தொடர்ச்சியாக, பிரெஞ்சு, ஜெர்மன் மொழி பெயர்ப்பு நுால் களை, தலைமை செயலகத்தில், முதல்வர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயகுமார், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
  • தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகிய ஆதிச்சநல்லூரில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. 
  • இதில், முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள், கட்டிடங்கள் அவர்களின் எலும்புக்கூடுகள் என பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.  
  • இந்நிலையில், முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel