Type Here to Get Search Results !

இந்தியாவின் கல்வி மற்றும் சமூக நுகர்வு குறித்த கள ஆய்வு அறிக்கை - Education in India as part of 75th round of National Sample Survey

  • தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வில், கேரள மாநிலத்தில் 96.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். 66.4 சதவீதத்துடன் ஆந்திரா மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது எனத் தெரியவந்துள்ளது.
  • இந்தியாவின் கல்வி மற்றும் சமூக நுகர்வு குறித்த 2017-ஜூலை முதல் 2018-ஜூன் வரையிலான தேசிய மாதிரி சர்வேயின் 75-வது சுற்று கள ஆய்வு அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்து.
  • இந்த சாம்பிள் சர்வே நாடுமுழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள 64,519 வீடுகளிலும், 6,188 மண்டலங்களில் உள்ள 49,238 வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
  • இதில் மாநில வாரியாக கல்வி கற்றவர்கள் குறித்த விகிதம், 7 வயதுக்கு மேல் கல்வி கற்றவர்கள் என கல்வி தொடர்பாக ஆய்வுகளை நடத்தி வெளியிட்டுள்ளது.
  • நாட்டிலேயே அதிகமான கல்வியறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலமாக கேரளா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கேரளாவில் கிராமப்புறங்களில் 95.4 சதவீதம் பேரும், நகர்புறங்களில் 96.4 சதவீதம் பேரும் ஒட்டுமொத்தமாக 96.2 சவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
  • 2வது இடத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருக்கும் டெல்லி மாநிலம் இருக்கிறது. இங்கு 88.7 சதவீதம் பேர் கல்வியறவு பெற்றவர்கள் உள்ளனர்.
  • 3வது இடத்தில் உத்தரகண்ட் மாநிலம், 87.6 சதவீதம் பேரும், இமாச்சலப்பிரதேசம் 86.6 சதவீதம் பேரும், அசாம் மாநிலம் 5வது இடத்தில் 85.9 சதவீதம் பேரும கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர்.
  • 6வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 84.8 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள் வசிக்கின்றனர். 7வது இடத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 83.7 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள் வசிக்கின்றனர்.
  • 8வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் 77.5 சதவீதம் மக்களும், நகர்ப்புறங்களில் 89 சதவீதமும் ஒட்டுமொத்தத்தில் 82.9 சதவீதம பேர் கல்வியறிவு உள்ளவர்களாக உள்ளனர்.
  • தமிழகத்தில் ஆண்களில் 87.9 சதவீதம் பேர் கல்வியறவு பெற்றவர்களும், பெண்களில் 77.9 சதவீதம் பேரும் கல்வியறவு பெற்றவர்களும் உள்ளனர்.
  • மிகவும் மோசமாக கடைசி இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 66.4 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர். ஆந்திராவுக்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 69.7 சதவீதம் பேரும், பிஹாரில் 70.9 சதவீதம் பேரும் கல்வியுறவு பெற்றவர்கள் வசிக்கின்றனர்.
  • தெலங்கானாவில் 72.9 சதவீதம் மக்களும், உத்தரப்பிரதேசத்தில் 73 சதவீதமும், மத்தியப்பிரதேசத்தில் 73.7 சதவீதமும் கல்வியறவு பெற்ற மக்கள் வசிக்கின்றனர்.
  • ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள் 77.7 சதவீதம் பேர் உள்ளனர். இதில் கிராமப்புறங்களில் 73.5 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 87.7 சதவீதம் பேரும் கல்வியறவு பெற்றவர்கள் உள்ளனர்.
  • இதில் நாடுமுழுவதும் ஆண்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 84.7 சதவீதம் பேரும், பெண்கள் 70.3 சதவீதம் பேரும் உள்ளனர். இந்த ஆய்வில் நாடு முழுவதும் பெண்களில் கல்வியறிவு பெற்றவர்களைவிட ஆண்கள் கல்வி்யறவு பெற்றவர்கள்தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளது. 
  • கேரளாவில் ஆண்களில் 97.4 சதவீதம்பேர் கல்வியறவு பெற்றவர்களும், பெண்களில் 95.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்றவர்களும் உள்ளனர்.
  • டெல்லியில் ஆண்களில் கல்வியுறவு பெற்றோர் 93.7 சதவீதம் பேரும், பெண்கள் 82.4 சதவீதம் பேரும் கல்வியறவு பெற்றவர்கள் உள்ளனர்.
  • கடைசி இடத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தில் ஆண்கள் கல்வியறவு 73.4 சதவீதமும், பெண்களில் 59.5 சதவீதம் மட்டுேம கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர். ஏறக்குறைய 14 சதவீதம் அளவுக்கு இடைவெளி இரு பாலருக்கு இடையே இருக்கிறது.
  • இதில் கிராமப்புறங்களில் 4 சதவீதம் வீடுகளில் மட்டுமே கணினி வசதி இருக்கிறது., நகர்ப்புறங்களில் 23 சதவீதம் வீடுகளில் மட்டுமே கணினி வசதி இருக்கிறது. 
  • கிராமப்புறங்களில் 15 வயது முதல் 29வரையில் 24 சதவீதம் பேருக்கும், நகர்புறங்களில் இதே வயதில் 56 சதவீதம் பேருக்கு கணினியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel