உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'ஹைபர்சோனிக்' வாகன சோதனை வெற்றி
- முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப வாகனம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
- அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் `ஹைபர் சோனிக்' தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன வாகனங்கள் (எச்எஸ்டிடிவி) உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இந்த வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்த வாகனத்தை வெற்றிகரமாகத் தயாரித்தது.
- ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து வாகனம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. காற்று அழுத்தத்துக்கு ஏற்ப விரைந்து செயல்படும் `ஸ்கிராேேம்ஜெட்' இன்ஜின் சக்தியுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அக்னி ரக ஏவுகணை பூஸ்டர், ஹைபர்சோனிக் வாகனத்தை விண்ணில் 30 கி.மீ உயரத்துக்கு எடுத்துச் சென்றது. அதன்பிறகு, ஹைபர்சோனிக் வாகனம் அதில் இருந்து தனியாக பிரிந்தது. வாகனம் தனியாக பிரிந்தவுடன் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் உடனடியாக இயங்கியது.
- வாகனம் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அணுஆயுதங்கள் மற்றும் அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் வாகனமாக இது செயல்படும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் 'விஐ' எனும் தனது புதிய பிராண்ட்
- வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இணைக்கப்பட்டு விட்டன. அதிலிருந்து, இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களின் நெட்வொக்குகளை ஒருங்கிணைப்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
- இந்த நிலையில், தற்போது நிறுவனத்தின் வா்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவனத்தின் புதிய பிராண்ட் 'விஐ' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- வோடாபோன்-ஐடியா ஆகிய இரு நிறுவனங்களின் முதல் எழுத்தைக் கொண்டு புதிய பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
- தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பிராண்ட் உலகின் மிகப்பெரிய இரு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதை குறிப்பது மட்டுமின்றி எதிா்கால பயண இலக்கையும் நிா்ணயிப்பதாக அமைந்துள்ளது.
- நடப்பாண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 28 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கண் தானம் செய்ய விரும்புவோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைத்து, கண்தானம் செய்தார்.
- கண் தானம் செய்ய விரும்புவோர், யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்தபின் எவ்வாறு, எங்கு, எப்படி கண்களை தானமாக கொடுப்பது போன்ற விவரங்கள், தெரியாமல் உள்ளனர்.
- இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழகத்தில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டை ஏற்படுத்தவும், www.hmis.tn.gov.in/eye-donor என்ற, புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- இந்த இணையதளத்தில், கண் தானம் செய்ய விரும்புவோர், தங்கள் பெயர், இருப்பிட முகவரி,மொபைல் போன் எண், 'இ -- மெயில்' முகவரிபோன்ற, தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதி மொழியை ஏற்க வேண்டும்.
- அதற்கான சான்றிதழை, நேரடியாக இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழை பதிவு செய்யப்பட்ட, மின்னஞ்சல் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
- சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ஆசிரியம் கல்வெட்டுகளை சக்கந்தியைச் சேர்ந்த மலைராஜன் உதவியுடன் கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், கருங்காலி விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
- கல்வெட்டுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. ஆசிரியம் கல்வெட்டுகள் பெரும்பாலும் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன.
- சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.
- சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் ஆங்காங்கே படைகள் இருந்தன. ஆனால் அவர்கள் ஆட்சி நிலையற்று இருந்ததால் நாட்டு மக்களின் உடைமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போனது.
- இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர். படைவீரர்களுக்கு சில உரிமைகள், வருவாய்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
- தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது.
- முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.
- பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது, என்று கூறினர்.