ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
- கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.
- அவர்களுக்கும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத நிலையில், அவர்களை குறி வைத்து ஆன்லைன் சூதாட்டதளங்கள் படையெடுத்து வருகின்றன. இதுதொடர்பான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களில் பெரும்பாலான அளவு வந்து கொண்டிருக்கின்றன.
- பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர். இதற்குப் பல இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்குப் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- இந்நிலையில், இன்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
- அதனால், இணையத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை தடை செய்ய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்படும் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு முதல் தடவை அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாம் முறை விளையாடினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்திய விஞ்ஞானிகள் அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள் கண்டுபிடிப்பு
- அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரளை கண்டுபிடித்ததற்காக இந்திய வானியல் விஞ்ஞானிகளுக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.
- பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளிவருட தூரத்தில் புதிய விண்மீன் திரள் இருப்பதை இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
- அந்த விண்மீன் திரள்களில் இருந்து வெளிப்பட்ட தீவிர புறஊதாக் கதிர்கள் மூலம் அந்தக் கூட்டத்தை புனேயில் உள்ள வானியல் பல்கலை விஞ்ஞானி கனக் சாஹா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.
- இந்திய விஞ்ஞானிகளால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரளுக்கு நாசா 'AUDFs01' என பெயரிட்டுள்ளது. நாசாவின் கூற்றுப்படி இவை 'Big Bang' நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக தோன்றிய விண்மீன் கூட்டம்.
- முந்தைய நாட்களில் அண்டமானது இருள், சாவோஸ், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் போன்றவற்றால் ஆனதாக கருதப்படுகிறது.அண்டம் குளிர்ச்சி அடைந்த பிறகு ஹைட்ரஜன் அணுக்கள் தோன்றின.
- அதன் பின் ஒளி பரவ ஆரம்பித்தது. இதன் மூலம் அண்டத்தின் இருண்ட காலம் முடிவடைந்தது எப்படி மற்றும் ஒளி பிறந்தது எப்படி போன்றவற்றிற்கு விடை தெரியும். இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின் மூலம் அண்டத்தின் ஆரம்ப காலம் பற்றிய தெளிவு கிடைக்கும்.
- உலக அறிவுசார் சொத்து அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 'உலகளாவிய புதுமை குறியீடு - 2020' பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் மொத்தம், 131 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- இதில், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற ஆசிய நாடுகள், கண்டுபிடிப்பு தரவரிசையில் கணிசமாக முன்னேறியுள்ளது தெரியவந்துள்ளது.புதுமை தரவரிசையில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
- மேலும், முதல், 10 இடங்களை, அதிக வருவாய் கொண்ட நாடுகளே கைப்பற்றி உள்ளன.இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.
- உலகில், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி, அரசின் ஆன்லைன் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக இருக்கும் உலகளாவிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கான குறிகாட்டிகளில், இந்தியா முதல், 15 இடங்களில் உள்ளதாக, உலக அறிவுசார் சொத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
- 'உலகளாவிய புதுமை குறியீட்டில்' முதல், 50 நாடுகள் வரிசையில், இந்தியா முதன்முறையாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன் இருந்த இடத்திலிருந்து, நான்கு இடங்கள் முன்னேறி, 48வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- அமெரிக்க - இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா? என்று மோடி வினவியுள்ளார்.
- நமது பொருளாதார அமைப்பு, சுகாதார அமைப்பை கொரோனா சோதித்து பார்க்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். தற்போதைய சூழல் புதிய மனநிலையையும், வளர்ச்சிக்கான அணுகுமுறையையும் எதிர்நோக்குகிறது.
- இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
- இந்தாண்டு மட்டும் 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வீட்டுவசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவ வசதிகளை இந்தியா உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாளை வளம் மிக்கதாக மாறும். தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். கைப்பேசி, மின்சாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க பெரிய வாய்ப்பு உள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதுகுறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் பட்டியலை வெளியிட்ட பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine)
- சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிச., மாதம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
- கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறிய உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதுகுறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் பட்டியலை பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா முதல் இடம் பிடித்திருக்கிறார்.
- இரண்டாவது இடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்குக் கிடைத்துள்ளது. 'இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது.
- இதைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சமூக இடைவெளியை சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தீவிரப்படுத்தினார். மேலும், 'பிரேக் தி செயின், வைரஸ் டிரேசிங் முறை' உள்ளிட்ட புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
- இதனால், கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா மட்டுமல்லாது 2018ம் ஆண்டு கேரளாவில் பரவிய நிபா வைரசைக் கட்டுப்படுத்துவதிலும் ஷைலஜா மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்' என, பிராஸ்பெக்ட் இதழ் குறிப்பிட்டுள்ளது.