Type Here to Get Search Results !

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலை

postal

கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்தவர்கள், புதிய வாய்ப்புகளைத் தேடி வரும் நிலையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3162 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 3,162

பணி: Gramin Dak Sevaks

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை.

வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.10,000  - 14,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020


நன்றி:தினமணி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel