- உலக அறிவுசார் சொத்து அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 'உலகளாவிய புதுமை குறியீடு - 2020' பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில் மொத்தம், 131 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற ஆசிய நாடுகள், கண்டுபிடிப்பு தரவரிசையில் கணிசமாக முன்னேறியுள்ளது தெரியவந்துள்ளது.
- புதுமை தரவரிசையில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
- சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு இந்த ஆண்டுக்கான உலக நாடுகளின் சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்த சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையின் டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது கண்டுபிடிப்புத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
- சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. சர்வதேச அளவில் கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறி உள்ள அதேவேளையில், மத்திய-தெற்காசியாவில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் நிலையான முன்னேற்றத்தை நம் காட்டியுள்ளதால், மத்திய மற்றும் தெற்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 2019ன் முன்னணி கண்டுபிடிப்பு சாதனையாளர்களில் ஒருவராக இந்தியாவை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலில் 2015ம் ஆண்டு இந்தியா 81வது இடத்தில் இருந்தது. 2019ம் ஆண்டு 52வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மேலும், முதல், 10 இடங்களை, அதிக வருவாய் கொண்ட நாடுகளே கைப்பற்றி உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.
- உலகில், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
- தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி, அரசின் ஆன்லைன் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக இருக்கும் உலகளாவிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கான குறிகாட்டிகளில், இந்தியா முதல், 15 இடங்களில் உள்ளதாக, உலக அறிவுசார் சொத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை -Global Innovation Index 2020: India ranks 48
September 04, 2020
0
Tags