Type Here to Get Search Results !

TNPSC 2nd SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியாவில் பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்குத் தடை

  • இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும்.
  • இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  • பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, வீ சாட், லூடோ, ஆப் லாக், கிளீனர்- போன் பூஸ்டர், எம்.வி.மாஸ்டர், ஆப் லாக் என மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் - மிஷன் கர்மயோகி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், 'மிஷன் கர்மயோகி' என்ற திட்டத்தை அமல்படுத்த, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம், மனிதவள மேம்பாட்டில், முக்கிய சீர்த்திருத்தமாக இருக்கும்.
  • அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவன கட்டமைப்பின் கீழ் அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டம்
  • பிரதமரின் பொது மனிதவள மேம்பாட்டுக் குழு
  • திறன் வளர்த்தல் ஆணையம்
  • டிஜிட்டல் சொத்துகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான தொழில்நுட்ப தளத்தை நிர்வகிக்க சிறப்பு நோக்கு அமைப்பு
  • அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு
  • எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாக, ஆக்கப்பூர்வமானவர்களாக, கற்பனைத்திறன் மிக்கவர்களாக, புதுமைகளை படைப்பவர்களாக, செயல்திறன் மிக்கவர்களாக, நிபுணத்துவம் பெற்றவர்களாக, முற்போக்கானவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, வெளிப்படைத்தன்மை மிக்கவர்களாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக தயார்படுத்துவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்.
  • அரசு ஊழியர் திறன் வளர்த்தல் திட்டங்களுக்கு பிரதமர் தலைமையிலான பொது மனிதவள மேம்பாட்டுக் குழு ஒப்புதலளித்து, கண்காணிக்கும்.
  • மிஷன் கர்மயோகி தனிநபர் (அரசு ஊழியர்கள்) மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • பிரிவு அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை அனைவரும் இந்த திட்டத்திற்குள் அடங்குவர்.
  • இது இரண்டு பாதைகளைக் கொண்டிருக்கும். சுயமாக இயக்கப்படும். இதன் மூலம் அதிகாரி தனக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்வுசெய்ய முடியும். 
  • மேலும் அதற்கான வழிகாட்டுதல்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அதிகாரிகள் தங்கள் வேலைகளை திறம்படச் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

காஷ்மீரில் ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 5 அலுவல் மொழிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • நாடு சுதந்திரம் பெற்ற பின், ஜம்மு - காஷ்மீருக்கு, அரசியல் சட்டத்தின், 370 மற்றும் 37 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. 
  • இந்த இரு பிரிவுகளையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. 
  • இதனையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக, கடந்த ஆண்டு அக்டோபர், 31ல் பிரிக்கப்பட்டன.
  • இந்நிலையில், காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக, உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளை மாநிலத்தின் அலுவல் மொழிகளாக அங்கீகரித்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தியா - ஜப்பான் இடையே ஜவுளி துறை ஒத்துழைப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • ஜப்பான் நாட்டு சந்தைக்கு ஏற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்காக இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதனால் தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் மற்றும் துணி வகைகளை இந்தியாவில் பரிசோதிக்கும் பணிகளை நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும்.
இந்திய நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் மற்றும் பின்லாந்து அரசின் நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் இடையே ஒப்பந்தம்
  • இந்திய நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் மற்றும் பின்லாந்து அரசின் நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே நிலவியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிலவியல் துறை, பயிற்சி, கனிம ஆய்வு, நில அதிர்வு மற்றும் நிலவியல் கணக்கெடுப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும், அறிவியல் இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel