- இந்தியா முழுவதும் வேலையின்மை ஒரு பெரிய சவாலாக இருக்கும் நேரத்தில், தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (National Crime Records Bureau - என்.சி.ஆர்.பி) தரவு, 2019 ல் வேலையின்மை காரணமாக குறைந்தது 2,851 பேர் தற்கொலை செய்துக்கொண்டதாக காட்டியுள்ளது.
- செவ்வாயன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,39,123 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2018 உடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 1,34,516 தற்கொலைகள் சம்பவம் அரங்கேறியது.
- 2018 ஆம் ஆண்டில், வேலையின்மை (unemployment) காரணமாக 2,741 பேர் தங்களைத் தற்கொலை செய்து கொண்டனர். இது மொத்த தற்கொலைகளில் 2 சதவீதமாகும்.
- மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், வேலையின்மை காரணமான தற்கொலை பட்டியலை பொறுத்தவரை கர்நாடகா மற்ற மாநிலங்களை விடவும் முன்னிலையில் உள்ளது.
- வேலையின்மை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளை பதிவு செய்வது இது இரண்டாவது முறையாகும்.
- கிட்டத்தட்ட 10.1 சதவீத வழக்குகளில், தற்கொலை செய்துக்கொண்டவர்களில் வேலையில்லாமல் இருந்தனர். தற்கொலை (Suicides Data) செய்து கொண்ட 14,019 பேர் "வேலையற்றவர்கள்" என்று தரவு காட்டுகிறது.
- தற்கொலை பட்டியலில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக 32.4 சதவீத பேர் தற்கொலை செய்துக்கொள்ளவதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. போதைப் பழக்கம், தொழில் பிரச்சினைகள், விவகாரங்கள் மற்றும் திவால்நிலை போன்றவை தற்கொலைகளுக்கு பிற காரணங்களாகும் கூறப்பட்டு உள்ளது.
- வேலையின்மை காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலோர் 18-30 வயது வரம்பில் உள்ளவர்கள் என்பதையும் தரவு காட்டுகிறது.
- வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டவர்களில் 2,851 பேரில் 62 பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள். 1,366 பேர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 1,055 பேர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 313 பேர் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். 55 நபர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- வேலையின்மை காரணமாக அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் கர்நாடகாவிலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு (Tamil Nadu), ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக என்.சி.ஆர்.பி அறிக்கை காட்டுகிறது.
- கர்நாடகாவில் 553 பேர், மகாராஷ்டிராவில் 452 பேர், ஜார்கண்டில் 232, குஜராத் 219 பேர், உத்தரபிரதேசத்தில் 156 பேர், அசாம் 155 பேர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளனர்.
- 2018 ஆம் ஆண்டிலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் (Maharashtra) வேலையின்மை காரணமாக முறையே 464 மற்றும் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 2019 ஆம் ஆண்டில் விவசாயத் (Farmer Suicides) தொழிலாளர்கள் செய்துக்கொண்ட 4,324 தற்கொலைகளில், 3,749 ஆண்கள் மற்றும் 575 பெண்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் மொத்த தற்கொலைகளில் 7.4 சதவீத விவசாயத்துறையில் நடந்துள்ளது.
இந்தியாவில் தற்கொலைசெய்வோரின் தரவு / DATA ON SUICIDES IN INDIA
September 03, 2020
0
Tags