Type Here to Get Search Results !

TNPSC 25th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்திக கால்பந்து சம்மேளனம் விருது 2020
  • இந்திய கால்பந்து அணியில், இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்துவும், சிறந்த வீராங்கனைகான விருதுக்கு சஞ்சுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கால்பந்து இந்திக கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
  • மேலும் இந்த பட்டியலில் வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதுக்கு அனிருத் தபாவும், வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை விருதுக்கு ரதன்பாலா தேவியும் தேர்வாகி உள்ளனர். 
  • சிறந்த நடுவராக அஜித் குமாரும் (மணிப்பூர்), சிறந்த உதவி நடுவராக பி.வைரமுத்துவும் (தமிழ்நாடு) தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சர்வதேச பருவநிலை இலக்கு தொடர்பான வட்ட மேஜை மாநாடு பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உரை
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியா குட்டரஸ் தலைமையில், சர்வதேச பருவநிலை இலக்கு தொடர்பான வட்ட மேஜை மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
  • இதில், இந்தியா சார்பில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பங்கேற்று பேசியதாவது:அதிக மழையும், அதிக வெப்பமும், பீஹாரின் பருவநிலை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. 
  • வெள்ளம், வறட்சி என, பல சவால்களை சந்திக்கும் நிலையில் பீஹார் உள்ளது.இதையொட்டி, 'ஜல் ஜீவன் ஹரியாளி அபியான்' என்ற திட்டத்தின் கீழ், நீராதார சேமிப்பு மற்றும் பசுமை பராமரிப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • வேளாண் சாகுபடியில் பருவநிலை மாற்றங்களை சமாளிக்கவும், நீர் மற்றும் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய மின் சக்தி, துாய்மையான எரிபொருள், பல்லுயிரி பாதுகாப்பு முறைகளால், பீஹார் ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது.
  • இயற்கை வனப் பகுதிகள் தவிர்த்து, சமூக பங்களிப்புடன் மரக் கன்று நடும் திட்டங்களை பரவலாக்கி, பசுமை மாநிலமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உலக வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும் என, ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • இதை அடைவதற்கு, பசுமை திட்டங்கள் மூலம், கரியமில வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், பீஹார், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
ஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு
  • ஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், 'இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்' புதிய தலைவராக, ஆதிமூலம் லட்சுமிபதி, ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
  • அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் ஐ.என்.எஸ். என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன் 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது. 
  • இதில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரள சுகாதாரத் துறைக்கு முதல் முறையாக ஐநா விருது
  • கேரள மாநிலம், தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் அது தொடர்பான இலக்குகளை நோக்கிய நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, சர்வதேச விருது பெற்றுள்ளது. 
  • ஐக்கிய நாடுகள் சபையின் UN Interagency Task Force (UNIATF) விருது, இந்த வருடம் கேரள மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.நா-வின் விருது, ஒரு நாட்டின் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  • 2019-ம் ஆண்டில், தொற்றில்லா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மனநல சிகிச்சைக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்காகவும் தொற்றில்லா நோய்களைச் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் நிறுவி அதில் வெற்றி பெற்றதற்காகவும் அந்த அமைச்சகங்களைக் கௌரவிக்க வழங்கப்படும் விருது, ஐ.நா-வின் இந்த விருது.
  • கேரளா அரசு, ஐ.நா-வின் இந்த விருதைப் பெறுவது இதுதான் முதல்முறை. ஐ.நா அமைப்பு கேரள மாநிலத்தைத் தவிர உலகில் வேறு 6 அமைச்சகங்களுக்கும் இந்த விருதை வழங்கியுள்ளது.
  • கேரளா அரசின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மாநில நுரையீரல் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், புற்றுநோய் சிகிச்சைத் திட்டம் மற்றும் பக்கவாத நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel