Type Here to Get Search Results !

TNPSC 26th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்

  • ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஹேக்கில் உள்ளது. 
  • இந்த நீதிமன்றத்தில் சர்வதேச சட்ட விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று செயல்படுகிறது. 
  • சர்வதேச சட்டம் படித்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு இயங்கும் இந்த ஐவர் குழுவின் ஆலோசனைப்படிதான் சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
  • இந்த ஆலோசனைக் குழுவில் முதல் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஐவரில் மிகவும் இளையவரான ஹரிஹரா அருண் சோமசங்கர், தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். சர்வதேச சட்டம் படித்தவர்.
  • சர்வதேச வழக்கறிஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்டமைக்காக நீதியரசர்களால் பாராட்டப்பட்ட இவர், சாகித்ய அகாடமி விருதுபெற்ற மீ.ப.சோமசுந்தரத்தின் மகள் வழி பேரன் ஆவார். இவர் சர்வதேச நீதிமன்ற ஆலோசகர் பொறுப்பில் இன்னும் 2 ஆண்டுகள் இருப்பார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரை
  • இந்தியாவில் 130 கோடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வந்துள்ளதாக தனது உரையில் நரேந்திரமோதி குறிப்பிட்டார்.
  • 1945ஆவது ஆண்டில் ஐ.நா நிறுவப்பட்ட போது அப்போதிருந்த பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் இப்போது மாறியுள்ளன என்று தனது உரையில் மோதி குறிப்பிட்டார்.
  • உலகில் சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது என்று தனது உரையில் கூறிய நரேந்திர மோதி தற்பொழுது நாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு யுகத்தில் வாழ்கிறோம் என்று கூறினார்.
  • ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்திய நரேந்திர மோதி அந்த சீர்திருதங்களுக்காக இந்தியர்கள் காத்திருப்பதாகவும் கூறினார். எவ்வளவு காலம் வரை ஐநாவின் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும் நரேந்திர மோதி கேட்டார்.
  • நாங்கள் வலிமை இல்லாதவர்களாக இருந்தபோது இந்த உலகிற்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. வலிமை மிக்கவர்களான பின்பு உலகிற்கு சுமையாகவும் மாறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையும் இந்தியாவின் முக்கிய கொள்கைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.
  • ஐக்கிய நாடுகள் மன்றத்தில் விரிவான பங்காற்ற, இந்தியா காத்திருப்பதாக குறிப்பிட்ட நரேந்திர மோதி, ஐ.நா அனுசரிக்கும் சர்வதேச யோகா தினம் இந்தியாவால் வழங்கப்பட்டது என்று கூறினார்.
  • கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதாக நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
  • கடந்த எட்டு - ஒன்பது மாதங்களாக இந்த உலகம் கொரோனா வைரஸ் உடன் போராடி வருகிறது இந்த போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்த இடத்தில் உள்ளது என்று நரேந்திர மோதி தனது உரையின் போது கேள்வி எழுப்பினார்.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இந்த பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வருவதற்கு உதவி செய்யும் என்றும் அவர் பேசினார்.
  • கடந்த நான்கைந்து ஆண்டுகளில் 40 முதல் 50 கோடி மக்கள் வரை வங்கி கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது சுலபமான காரியமாக இருக்கவில்லை என்று கூறிய நரேந்திர மோதி டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியா சர்வதேச முன்னோடிகளில் ஒன்றாக இருப்பதாக கூறினார்.
  • 2025ஆம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக உருவாவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது என்று நரேந்திர மோதி தனது உரையில் கூறினார்.
  • தற்சார்பு இந்தியா திட்டம் சர்வதேச பொருளாதாரம் பன்மடங்காக உதவி செய்யும் என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
  • பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதற்கு இந்தியா ஊக்கமளித்து வருகிறது. 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
  • பாலினம் மாறிக் கொண்டவர்களுக்கான சட்டபூர்வ உரிமைகளை கொண்டு வந்த நாடாகவும் இந்தியா இருக்கிறது.
  • உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக உள்ள இந்தியா தனது அனுபவங்களை இந்த உலகில் நன்மைக்காகவே பயன்படுத்தும். போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு எப்பொழுதுமே இந்தியா எதிராகவே இருந்துள்ளது என்று மோதி பேசினார்.
இந்தியா, டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
  • இந்தியா மற்றும் டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது.
  • கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை, அறிவுசார் சொத்து (ஐபி) ஒத்துழைப்புத் துறையில் டென்மார்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளித்தது.
  • இதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக அமைப்புடன் அறிவுசார் ஒத்துழைப்பு துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
  • கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மோகபத்ரா மற்றும் டென்மார்க்கின் தூதர் ஃப்ரெடி ஸ்வானே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • இரு நாடுகளின் வணிகங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களிடையேயான சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் அறிவுசார் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் பயிற்சித் திட்டங்கள், நிபுணர்களின் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கம்
  • அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கிளைப்பிரிவை மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கிவைத்துள்ளார்.
  • அசாமில் புதிதாக வேளாண்மைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு துவங்கியதன் மூலம் அருணாசல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்படும்.
  • 2050-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு அதிகரிக்கும். இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையிலும், உணவுப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் அரசு செயல்பட்டு வருகிறது.
  • இந்தியா விளைச்சல் மற்றும் உற்பத்தியில் தற்போது தன்னிறைவு அடைந்த நாடாக மட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் வளர்ந்துள்ளது. வளர்ச்சி நோக்கிய செயல்முறைக்கும், முடிவுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும்பொருட்டு ஜார்கண்ட் மற்றும் அசாமில் புதிய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியா இலங்கை உச்சி மாநாடு
  • இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார். அதில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
  • இலங்கை இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்திய மதிப்பில் 110 கோடி மானியம் வழக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியாவில் வசதிகள் செய்யப்படும். அதற்காக உத்தரபிரதேசத்தின் குஷி நகரில் இருந்து விமானம் இயக்கப்படும்.
  • கரோனா தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க, இந்தியா 400 மில்லியன் டாலர் பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது. தற்போதைய கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் காணொளி உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது.
  • சில பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை தற்காலிக தடை விதித்துள்ளது. அதற்கு விரைவில் தளர்வுகள் வழங்கப்படும். 
  • மேலும், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்தை திறக்க, வரும்படி பிரதமர் மோடிக்கு, இலங்கை பிரதமர் ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel