Type Here to Get Search Results !

TNPSC 20th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கட்டுமானம், உள்கட்டமைப்பு பிரிவில் அரியலூரில் 6 ஏக்கரில் திறன் மேம்பாட்டு மையம் தமிழ்நாடு அரசுடன் ராம்கோ சிமென்ட்ஸ் ஒப்பந்தம்

  • கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கான உயர்நிலை திறன் மேம்பாட்டு மையத்தை (ஏஎஸ்டிசி) நிறுவுவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு வழங்கியுள்ள பொறுப்பை ஏற்க ராம்கோ சிமென்ட்ஸ் தயாராகி உள்ளது.
  • அரியலூரில் 6 ஏக்கர் பரப்பளவில் உயர்நிலை திறன் மேம்பாட்டு மையம் அமைக்க, முதல்வர் பழனிசாமி முன்னிலை யில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளம் பன்மொழி திறனாய்வு, மின்ஆளுமை தளமாக மேம்பாடு

  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளம் ரூ.2 கோடிமதிப்பீட்டில் பன்மொழி திறனாய்வு மற்றும் மின்-ஆளுமை தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. https://www.tnskill.tn.gov.in இணையதளத்தை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். 
  • பயனாளர்களின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், மதிப்பீட்டு முகமைகளின் பதிவுகள், பயிற்சி தொடர்பான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள், இணையவழி சான்றிதழ்கள், ஆதார் எண் இணையப்பெற்ற வருகை பதிவேடு பராமரித்தல், பயிற்சி பெற்றவர்களது பணி அமர்த்தல் கண்காணிப்பு, இணையவழி பணப்பயன் ஒப்பளிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள இயலும். 
  • அத்துடன், ஒருங்கிணைந்த ஒற்றைத் திறன் பதிவு தொகுதியை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பிற துறைகளின் விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம்
  • அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும், 'கோர்ஸெரா' நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த, முன்னணி இணையவழி கற்றல் தளம். 
  • இந்நிறுவனம், பல்கலைகள், கல்லுாரிகள், கூகுள், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு பாடங்களில், சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. 
  • இணைய வழியில், பொறியியல், இயந்திர கற்றல், டிஜிட்டல் சந்தைப் படுத்தல், மருத்துவம் உள்ளிட்டவற்றில் இவை வழங்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள, 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
  • தமிழகத்தில், 50 ஆயிரம் வேலையற்ற நபர்களுக்கு, இணைய வழியில், இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்கு, முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்திற்கு மத்திய அரசின் விருதுகள்
  • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், சிறப்பாக பயிற்றுவித்ததற்காக, அம்பத்துார் அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் சுகுமாருக்கு, பொறியியல் அல்லாத பிரிவில், மாநில மற்றும் தேசிய அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருது; 
  • மதுரை அரசு தொழிற் பயிற்சி நிலைய, உதவி பயிற்சி அலுவலர் செல்வேலுக்கு, பொறியியல் பிரிவில், மாநில அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருதும், மத்திய அரசால் வழங்கப்பட்டது.
  • மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்காக மின் ஆளுமை விருது மற்றும் தேசிய நீர் புதுமை விருது
  • சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு டயல்பார் வாட்டர் 2.0 என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது 
  • கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது 
  • ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட மின் ஆளுமை விருது
  • 2018-19ம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது - தருமபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் - சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் - காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி உட்பட ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. 
  • கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.

மாலத்தீவில் பொருளாதார நெருக்கடி இந்தியா ரூ.1850 கோடி நிதியுதவி

  • தெற்காசிய நாடான மாலத்தீவில், கொரோனா பாதிப்பால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு நிதியுதவி வழங்கும்படி, பிரதமர், நரேந்திர மோடியிடம், அந்நாட்டு அதிபர், இப்ராஹிம் முகமது சோலிஹ் கோரிக்கை விடுத்தார்.
  • இதையடுத்து, கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக, 1,850 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக, இந்தியா அறிவித்தது. நிதி வழங்கும் விழா, மாலேவில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel