- உலகளாவிய ஸ்மார்ட் சிட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில்( IMD Smart City Index), அபுதாபி மற்றும் துபாய் முன்னேற்றம் கண்டுள்ளது அமீரக வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
- இன்ஸ்டிடியூட் ஃபார் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட்ஸ்(IMD) 2020 ஸ்மார்ட் சிட்டி குறியீட்டில்(Smart City Index) கடந்த 12 மாதங்களில், அமீரக தலைநகர் அபுதாபி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
- 109 நகரங்கள் அடங்கிய இந்த தரவரிசை பட்டியலில் 56-வது இடத்தில் இருந்த அபுதாபி, தற்போது 14 இடங்கள் முன்னேறி, 42-வது இடத்தை பிடித்துள்ளது.
- அமீரகத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் வணிக எமிரேட்டான துபாய், 2 இடங்கள் முன்னேறி 43-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் டோக்கியோ மற்றும் பெய்ஜிங் போன்ற மேம்பட்ட நகரங்களை விட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட அமீரக எமிரேட்கள் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
- பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தரவு அடிப்படையிலும், தங்கள் நகரங்கள் எவ்வளவு “ஸ்மார்ட்” என்பதை பற்றிய குடிமக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
- கோவிட் -19 பேரிடர் காலத்தில் தொழில்நுட்பம் வகிக்கும் பங்கை ஆராய்ந்து சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பிற்கான பல்கலைக்கழகத்துடன் இணைந்து( (SUTD), இன்டெக்ஸின் இரண்டாவது பதிப்பை IMD வெளியிட்டுள்ளது.
- இதன் படி உலகளவில் சிங்கப்பூர், பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி(Helsinki), மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச்(Zurich), ஆக்லாந்து மற்றும் ஒஸ்லோ(Oslo) உள்ளிட்ட நகரங்கள் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
- ஹைதராபாத் 85 வது இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் குறியீட்டு நகரம் 67 வது இடத்தில் இருந்தது. புது தில்லி 2019 ல் 68 வது இடத்திலிருந்து 86 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மும்பை 78 வது (2019) இலிருந்து 93 வது இடத்திற்கு சரிந்தது.
- 2019 ல் 79 வது இடத்திலிருந்து பெங்களூரு 95 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மும்பை மற்றும் பெங்களூரு கடுமையான சாலை நெரிசலை எதிர்கொள்கின்றன. டெல்லி மற்றும் ஹைதராபாத் அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ளன.
Global Smart City Index 2020 உலகளாவிய ஸ்மார்ட் சிட்டி குறியீட்டு 2020
September 21, 2020
0
Tags