- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், சிறப்பாக பயிற்றுவித்ததற்காக, அம்பத்துார் அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் சுகுமாருக்கு, பொறியியல் அல்லாத பிரிவில், மாநில மற்றும் தேசிய அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருது
- மதுரை அரசு தொழிற் பயிற்சி நிலைய, உதவி பயிற்சி அலுவலர் செல்வேலுக்கு, பொறியியல் பிரிவில், மாநில அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருதும், மத்திய அரசால் வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியமைக்காக மின் ஆளுமை விருது மற்றும் தேசிய நீர் புதுமை விருது
- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு டயல்பார் வாட்டர் 2.0 என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது
- கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது
- ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட மின் ஆளுமை விருது
- 2018-19ம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது - தருமபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் - சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் - காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி உட்பட ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
- கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்திற்கு மத்திய அரசின் விருதுகள் / AWARDS FOR TAMILNADU VARIOUS DEPARTMENT BY CENTRAL GOVERMENT
September 21, 2020
0
Tags