Type Here to Get Search Results !

TNPSC 19th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

காஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு

 • காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பலஆண்டுகளாக அங்கு தீவிரவாதத்தால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள வர்த்தக நடவடிக்கைகளையும் நலிவடைந்த பிற துறைகளையும் மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
 • இதற்காக, வர்த்தகர்களுக்கு ரூ.1,350 கோடிக்கான சிறப்பு நிதித் தொகுப்பை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்தார்.
 • அதன்படி நடப்பு நிதியாண்டில் 6 மாதங்களுக்கு கடன் பெற்றுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கான வட்டியில் 5 சதவீதத்தை அரசே செலுத்தும் என்று மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
 • மேலும், கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் கைவினை தொழில் துறையில் பணியாற்றுவோருக்கு அதிகபட்ச கடன் வரம்பு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நீட்டிக்கப்படும். அதில் 7 சதவீத வட்டியையும் அரசு வழங்கும்.
 • மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கனெக்ட் 2020 மாநாட்டு
 • தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 'கனெக்ட் 2020' என்ற 5 நாள்மாநாடு, காணொலி காட்சி மூலம் கடந்த15-ம் தேதி தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையம் தொடர்பான 3 கொள்கைகளை வெளியிட்டார்.
 • கடந்த 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த 81 திட்டங்கள், வணிகரீதியாக உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதர 191 நிறுவனங்களின் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இதுதவிர, எனது அமெரிக்க, ஐக்கிய அரபு அமீரக பயணங்களின்போது ரூ.19ஆயிரம் கோடி மதிப்பிலான 63 திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
 • இதன்மூலம் புதிதாக 83,300 வேலைவாய்ப்புகள் உருவாகும். கரோனா ஊரடங்கு காலத்திலும் ரூ.31,464 கோடி மதிப்பிலான 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் 69,712 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
திவால் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது
 • கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. தொழில்கள் பலவும் முடங்கின.
 • இந்நிலையில் நிறுவனங்கள் வாங்கியக் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லையெனில் அவை வாராக்கடனாகக் கருதப்பட்டு நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது திவால் சட்டத்தின் அடிப்படை அம்சம்.
 • இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக அனைத்தும் முடங்கியதால், மார்ச் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் எந்தவித புதிய திவால் நடவடிக்கைகளும் நிறுவனங்கள் மீது எடுக்க கூடாது என திவால் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
 • இது தொடர்பாக ஜூன் மாதத்தில் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த அரசாணைக்குப் பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களை தாக்கினால் சிறை: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்
 • கரோனா வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. 
 • இந்நிலையில் பெருந்தொற்று நோய்கள் திருத்த மசோதா-2020-ஐ மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
 • இதுபோன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. சுகாதாரப் பணியாளர்களை அவமதித்தாலோ தாக்கினாலோ, 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
நேபாள நாட்டிற்கு இரு அதிநவீன ரயில்களை இந்தியா வழங்கியது.
 • சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன 'மீட்டர் கேஜ்' ரயில்களை கொங்கன் ரயில்வே நேற்று முன்தினம் நேபாள ரயில்வேயிடம் ஒப்படைத்தது. 
 • சோதனை ஓட்டமாக முதல் ரயில் பீஹாரின் ஜெயநகரில் இருந்து 35 கி.மீ. துாரத்தில் உள்ள நேபாளத்தின் குர்தா ரயில் நிலையம் சென்றது.
பீகாரில் ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
 • பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அந்தவகையில் வரும் 21ம் தேதி பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் 45,945 கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவையின் மூலம் இணைக்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைக்கிறார்.
 • இந்த 9 நெடுஞ்சாலை திட்டங்களும் 350 கிமீ தொலைவிற்கு மொத்தம் ரூ.14,258 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன. பீகாரில் மாநிலத்திற்குள்ளான சாலை பயணத்தை எளிதாக்கும் விதமாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படும் விதமாக அமைக்கப்படுகிறது. 
 • பீகாருக்குள் மட்டுமல்லாது, பீகாரிலிருந்து அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களையும் இணைக்கும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும்.
 • பிரதமர் நரேந்திர மோடி 2015ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.54,700 கோடி ரூபாய் செலவில், 75 திட்டங்களை அறிவித்தார். அதில், 13 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டன. 38 திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன.
 • பிரதமர் தொகுப்பின் கீழ், கங்கை ஆற்றில் கட்டப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை 17ஆக இருக்கும். பீகார் மாநிலத்தில் ஆறுகளின் குறுக்கே ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் இடையே பாலம் கட்டப்படவுள்ளது.
 • NH-31: 47.23 கிமீ தொலைவிற்கான பக்தியார்பூர் - ரஜாலி 4 வழிச்சாலை: ரூ.1149.55 கோடி
 • பக்தியார்பூர் - ரஜாலி 50.89 கிமீ தொலைவிற்கான 4 வழிச்சாலை: ரூ. 2650.76
 • NH-30: ஆரா - மோஹானியா 4 வழிச்சாலை - 54.53 கிமீ தொலைவு: ரூ.885.41 கோடி
 • ஆரா - மோஹானியா 4 வழிச்சாலை - 60.80 கிமீ தொலைவு: ரூ.855.93 கோடி
 • NH-131A: நரேன்பூர் - புர்னியா 49 கிமீ தொலைவில் 4 வழிச்சாலை: ரூ.2288 கோடி
 • NH 131G: 39 கிமீ தொலைவில் ஆறுவழிச்சாலை பாட்னா ரிங் ரோடு(கன்ஹாலி-ராம்நகர்): ரூ.913.15 கோடி
 • NH-19: பாட்னாவில் கங்கை ஆற்றில் 14.5 கிமீ தொலைவிற்கு 4 வழிப்பாதை கொண்ட பாலம்: ரூ.2926.42 கோடி
 • NH-106: கோசி ஆற்றில் 28.93 கிமீ தொலைவில் 4 வழிப்பாதை கொண்ட பாலம்: ரூ.1478.40 கோடி
 • NH-131B: கங்கை ஆற்றில் 4.445 கிமீ தொலைவில் 4 வழிப்பாதை கொண்ட பாலம்: ரூ.1110.23 கோடி.
 • பீகாரில் உள்ள 45,945 கிராமங்களை இணைய சேவையில் இணைக்கும் டிஜிட்டல் புரட்சி திட்டம் இது. தொலைத்தொடர்புத்துறை, எலக்ட்ரானிக்ஸ் & ஐடி அமைச்சகம் மற்றும் பொதுச்சேவை மையம் ஆகிய துறைகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.
 • பொதுச்சேவை மையம்(CSC) பீகாரில் மொத்தம், 34,821 மையங்களை கொண்டுள்ளது. எனவே அந்த தொழிலாளர்களை கொண்டு இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவிடும். 
 • இந்த திட்டத்தின் மூலம் அரசு தொடக்கப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆஷா பணியாளர்கள் உட்பட அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு wi-fi மற்றும் 5 கட்டணமில்லா இணைய இணைப்பு கொடுக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel