செயின்ட் ஜோசப் இன்ஜி., கல்லுாரிக்கு விஸ்வகர்மா விருது
- அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு, விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. சமூக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக, இந்த விருது வழங்கப்படுகிறது.
- கொரோனா பேரிடர் காலத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில், இந்தாண்டுக்கான விருது பட்டியல் தயாரிக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில், அரசு துறையின் பணிகளுக்கு உதவிய பிரிவில், தமிழகத்தில் உள்ள ஜோசப் இன்ஜி., கல்லுாரி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இம்மாதம், 17ம் தேதி, டில்லியில் நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், விருதுகளை வழங்கினார்.
ஐ.நா.,வின், இளம் தலைவர்களுக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழுவில் 17 பேர் தேர்வு
- சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர்களை ஊக்குவித்து, கவுரவிக்கும் வகையில், இளையோருக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழு தேர்வு செய்யப்படுகிறது.
- இந்தாண்டின் இளையோருக்கான, நிலைத்த வளர்ச்சிக் குழுவில், இந்தியா, பாக்., சீனா உள்ளிட்ட, நாடுகளைச் சேர்ந்த, இளம் தலைவர்கள், 17 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.
- அவர்கள், சுற்றுச்சூழல், வேளாண், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம், சமூக மேம்பாட்டிற்கு சீரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்கள், மேலும் பல இளைஞர்களை ஊக்குவித்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்பார்கள்.
- டில்லியைச் சேர்ந்த, 'பிரிட்டிஷ் பள்ளி' மாணவரான, உதித் சிங்கால், தனது, 'கிளாஸ் 2 சாண்ட்' திட்டத்தின் மூலம், கழிவு பாட்டில்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.
- 'சிலிக்கா' பிளாஸ்டிக் ஆதிக்கத்தால், பழைய கண்ணாடி பாட்டில்களுக்கு, நல்ல விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, உதித் சிங்கால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, உயர்தரமான 'சிலிக்கா' மணலாக மாற்றுகிறார்.
- இந்த வகையில், 8,000 பாட்டில்கள் மூலம், அவர், 4,815 கிலோ சிலிக்கா மணலை தயாரித்துள்ளார்.
உலகின் மிக தூய்மையான கடற்கரை இந்தியாவில் 8 இடங்கள் தேர்வு
- நாட்டில் மிக தூய்மையான மற்றும் சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு உகந்த கடற்கரைகள் எவை என்பதை அங்கிகரிக்க பிரபல சுற்றுசூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் கடற்கரைகளுக்கு நீல கொடி அந்தஸ்து வழங்கப்படும்.
- இதன்படி, இந்தியாவில், குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டாமன் மற்றும் டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோடு மற்றும் பதுபித்ரி, கேரளாவில் உள்ள கப்பாடு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ருஷிகொண்டா, ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை மற்றும் அந்தமான் நிகோபார் தீவில் உள்ள ராதாநகர் 8 கடற்கரைகள் இந்த பெருமைமிகுந்த நீல கொடி அந்தஸ்துக்கான பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
Namma Chennai செயலி
- பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) நடவடிக்கை மேற்கொள்ளும்.
- இது நல்ல திட்டம் என்பது மட்டுமில்லாமல், இந்த செயலி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- கொரோனா (COVID-19 Pandemic) காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.
- மேலும் கொரோனா குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது. தற்போது "Namma Chennai" செயலி மூலம் மக்கள் தங்கள் குறைகளையும் புகார்களையும் தெரியப்படுத்தலாம்.
- அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு, மழைநீர் தேக்கம், குப்பை தேக்கம், சேதமடைந்த சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது சுகாதாரம் போன்றவை சார்ந்த குறைகையும், புகார்களையும் சென்னை மக்கள் தெரியப்படுத்தலாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
- பிஹாரில் 17 ஆண்டுகால பெரும் கனவாக இருந்து வந்த வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பெரும் பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- கோசி ரயில் பெரும் பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது பிகாரின் வரலாற்றிலும், வட கிழக்கை இணைக்கும் ஒட்டு மொத்த பிராந்தியத்திலும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.
- இதைத் தவிர, பயணிகள் வசதிக்கான மற்றும் பிஹாரின் நலனுக்கான 12 ரயில் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். கியுல் ஆற்றில் ஒரு புதிய ரயில்வே பாலம், 2 புதிய ரயில் தடங்கள், 5 மின்மயமாக்கல் திட்டங்கள், ஒரு மின்சார எஞ்சின் பணிமனை மற்றும் பர்-பக்தியார்பூர் இடையே மூன்றாவது தடம் ஆகியவை இதில் அடங்கும்.
- நிர்மலி மற்றும் பாப்தியாஹி இடையே 1887-இல் ஒரு மீட்டர்கேஜ் இணைப்பு கட்டமைக்கப்பட்டது. 1934-இல் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் இந்திய- நேபாள நில நடுக்கத்தின் போது இந்த ரயில் தடம் நீரில் அடித்து செல்லப்பட்டது.
- அதன்பின், கோசி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு, இந்தத் தடத்தை மீட்டமைக்க நீண்ட காலத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- 2003-04-இன் போது கோசி பெரும் பால திட்டத்துக்கு இந்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலத்தின் கட்டுமான செலவு ரூ 516 கோடி ஆகும்.
- இந்திய- நேபாள எல்லையில் இந்த பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோவிட் பெருந்தொற்றின் போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்போடு இந்தப் பாலத்துக்கான பணிகள் நிறைவுற்றன.
- சுபால் நிலையத்தில் இருந்து சஹர்சா-ஆசான்பூர் குபா சோதனை ரயிலையும் பிரதமர் துவக்கி வைத்தார். தொடர் ரயில் சேவைகள் தொடங்கிய பின்னர், சுபால், அராரிய மற்றும் சஹர்சா மாவட்டங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். இந்தப் பகுதி மக்கள் கொல்கத்தா, தில்லி மற்றும் மும்பை போன்ற நீண்ட தூரத்தில் உள்ள நகரங்களை சென்றடைவதையும் இது எளிதாக்கும்.
- ஹாஜிப்பூர்-கோஸ்வார்-வைஷாலி மற்றும் இஸ்லாம்பூர்- நடேஷாரில் இரண்டு புதிய தடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கர்நவுதி- பக்தியார்பூர் இணைப்பு பைபாஸையும், பர்- பக்தியார்பூர் இடையே மூன்றாவது தடத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
- முசாபர்பூர்- சீதமர்ஹி, கதிஹார்- புதிய ஜல்பைகுரி, சமஸ்திபூர்-தர்பங்கா-ஜெய்நகர், சமஸ்திபூர்- காகரியா, பாகல்பூர்- சிவநாராயண்பூர் ஆகிய மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.
கோவிட்-19 காலத்தில் சிறப்பான செயல்பாடு இந்தியாவின் மிகச்சிறந்த மருத்துவமனைகளாக ஓமந்தூரார், வேலூர் சிஎம்சி தேர்வு
- கரோனா தொற்று ஏற்பட்டு தமிழகம் முழுவதும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் பொறுப்பில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக பங்காற்றி வருகின்றன.
- குறிப்பாக சென்னையில் கரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முதலில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து இங்கு சிறப்பான தனிமைப்படுத்துதலுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மருத்துவர்களின் சிறப்பான சேவை, சரியான மருத்துவ உபகரணங்கள், செவிலியரின் கனிவான அணுமுறை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன் கூடிய உளவியல் ஆலோசனைகள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் சிறப்பான பணியை செய்து வருகின்றன.
- எண்ணற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். இத்தகைய சிறப்பான அர்பணிப்புமிக்க மருத்துவமனைகளில் ஓமந்தூரார் மருத்துவமனை குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது.
- கோவிட் சிகிச்சையில் சிறப்பாக தேர்வு செய்யப்படும் இவ்விருதுகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவமனைகளிலிருந்து 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் CAHO ஆல் பெறப்பட்டிருந்தன.
- தில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை மற்றும் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகிய மருத்துவமனைகள் முதன்மையான விருதுகளைப் பெற்றுள்ளன.
- பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கு மருத்துவமனைகள் எடுத்த முயற்சிகள், செய்த புத்தாக்கங்கள் மீதான தகவல் தொகுப்பை வெளியிடவும் CAHO திட்டமிட்டிருக்கிறது.
- சுகாதார பராமரிப்பு சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது மீது தன்னை அர்ப்பணித்திருக்கின்ற இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான CAHO, பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பில் நேர்த்திக்காக மருத்துவமனைகளுக்கு 2020 விருதுகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவித்துள்ளது.
- கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், பணியாளர் / பணி அமைவிட பாதுகாப்பிற்காக மருத்துவமனைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் இந்த வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஐசிஎம்ஆர் -ன் NIOH அமைப்பு மற்றும் HSE தொழில்முறை பணியாளர்களின் உலகளாவிய சங்கம் ஆகியவற்றோடு இணைந்து CAHO நடத்திய இந்நிகழ்வில் வெளிநாடுகளிலிருந்து 7 மருத்துவமனைகள் உட்பட, 100-க்கும் அதிகமான மருத்துவமனைகள் பங்கேற்றன.
- மிகப்பெரிய மருத்துவமனைகள் வகையினத்தில் சிஎம்சி வேலூர் (தமிழ்நாடு) மற்றும் அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (கொச்சி) ஆகியவை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை முறையே வென்றன. ராமய்யா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (பெங்களுரு) மற்றும் எனிபோயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (மங்களூர்) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
- பெரிய மருத்துவமனைகள் வகையினத்தில் (300-600 படுக்கை வசதிகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி (சென்னை) மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை, மொஹாலி (பஞ்சாப்) முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றன. இவ்வகையினத்தில் பாய் ஜெர்பாய் வாடியா குழந்தைகள் மருத்துவமனை (மும்பை) மற்றும் தவாம் மருத்துவமனை (அபுதாபி), ஊக்குவிப்பு விருதுகளை வென்றன.
- நடுத்தர அளவு மருத்துவமனைகள் வகையினத்தில் (100-300 படுக்கைகள்) ஆஸ்டர் சனாத் மருத்துவமனை (ரியாத்) மற்றும் விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை மையம் (பெங்களுரு மருத்துவக்கல்லூரி) ஆகியவை முறையே முதல் இரண்டு பரிசுகளை வென்ற நிலையில் ஆனந்த் சர்ஜிக்கல் ஹாஸ்பிட்டல் (அகமதாபாத் மற்றும் கோஹினூர் ஹாஸ்பிட்டல்ஸ் (மும்பை) ஊக்குவிப்பு விருதுகளைப் பெற்றன.
- சிறிய மருத்துவமனைகள் வகையினத்தில் (100 படுக்கைகளுக்கும் குறைவான) கொலம்பியா ஏசியா ஹாஸ்பிட்டல் ஹெப்பால் (பெங்களுரு) முதல் பரிசையும் தர்மகிரி செயிண்ட் ஜோசப் ஆஸ்பிட்டல் (கோழிக்கோடு, கேரளா) இரண்டாம் பரிசையும் பெற்றன. ஓக்ஹார்ட் ஹாஸ்பிட்டல் (தானே) மற்றும் ARMC AEGiS மருத்துவமனை (மலப்புரம், கேரளா) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் தரப்பட்டன.