Type Here to Get Search Results !

TNPSC 15th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

NEW  SEPTEMBER 2020 PDF-TNPSC SHOUTERS  :

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா - 2020

  • விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், வேளாண் துறையில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
  • அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா - 2020 திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.
  • அரசின் அமைப்புகள் அதிகமான தலையீடுகளை உண்டாக்குமோ என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் வேளாண்துறையில் அதிகமான முதலீடுகளை செய்ய முடியும் என்பதாகும்.

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

  • இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 
  • இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரகம் இணைந்துள்ளது. 
  • வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்கவும் தூதரங்களை ஏற்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன. 
  • இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாயின.இந்நிலையில் இன்று இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, யு.ஏ.இ. வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

குஜராத் ஆயுர்வேத நிறுவனங்கள் தேசிய அந்தஸ்துக்கு மசோதா

  • குஜராத்தில் உள்ள ஆயுர்வேத நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்குவதற்கான, ஆயுர்வேத நிறுவன மசோதா, ராஜ்யசபாவில் செய்யப்பட்டது.
  • குஜராத்தில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதுகலை ஆயுர்வேதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆயுர்வேத மஹாவித்யாலயா, ஆயுர்வேத மருந்துகள் நிறுவனம் ஆகியவற்றை ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒன்றிணைக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • அந்த நிறுவனங்களுக்கு, தேசிய அந்தஸ்து வழங்கவும், மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா கடந்த மார்ச் மாதம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. 

தபால் நிலையத்திற்கு சந்தீப் சிங் பெயர் அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்

  • இந்தியாவைச் சேர்ந்த, சந்தீப் சிங் தலிவால், சிறு வயதிலேயே, பெற்றோருடன் அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் குடியேறினார்.
  • வளர்ந்து வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், 2009ல், சமூகப் பணியாற்றும் நோக்கில், ஹாரிஸ் நகர போலீசில் சேர்ந்தார்.கடந்த, 2019, செப்., 27ல், பணியில் இருந்த போது, ஒரு காரை நிறுத்தி விசாரிக்க முயன்றார். அப்போது, காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், சந்தீப் சிங் தலிவால் உயிரிழந்தார்.
  • இதையடுத்து, அமெரிக்க - சீக்கிய சமூக மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்ட, சந்தீப் சிங் தலிவாலை கவுரவிக்க வேண்டும் என்ற தீர்மானம், கடந்த ஆண்டு, அமெரிக்க பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.
  • அதன்படி, சந்தீப் சிங் தலிவால் பெயரை, ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு சூட்டும் மசோதா, அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • செனட் சபை ஒப்புதலுக்குப் பின், 'டெபுடி சந்தீப் சிங் தலிவால் போஸ்ட் ஆபிஸ் சட்டம்' அமலுக்கு வரும்.
  • அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், மேற்பார்வை போலீஸ் பிரிவின் முதல் சீக்கியர்; பணியில் தாடி, தலைப்பாகை அணிய அனுமதி பெற்ற முதல் சீக்கியர் என்ற சிறப்புகளை பெற்றவர், சந்தீப் சிங் தலிவால். தற்போது, தபால் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்ட, இரண்டாவது, இந்திய - அமெரிக்கர் என்ற சிறப்பும் கிடைத்து உள்ளது.
  • கடந்த, 2006ல், முதன் முறையாக, இதுபோன்ற சிறப்பு, தெற்கு கலிபோர்னியா எம்.பி., தலிப் சிங் சாந்துக்கு கிடைத்தது.

முதல் முறையாக காணொலி மூலம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்

  • கரோனா நெருக்கடி காரணமாக, ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக வராமல் காணொலி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொலி முறையில் பங்கேற்கின்றனா். 
  • கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயாா்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

MPக்களின் சம்பளத்தை 30% குறைப்பதற்கான மசோதாவை மக்களவை நிறைவேற்றியது

  • 2020ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா, மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆட்சேபனைகளை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • பிரதமர் (PM Narendra Modi) மற்றும் அவரது அமைச்சர்கள் குழு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2020-2021 நிதியாண்டிற்கான தங்கள் சம்பளத்தை 30% குறைத்து பெறுவார்கள்.
  • மேலும், 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டி நிதியையும் நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • பல எம்.பி.க்கள் ஏற்கனவே தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியான, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற அளவிலான, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக பயன்படுத்த உறுதி அளித்திருந்தனர்.
விமான சட்டத் திருத்த மசோதா 
  • விதி மீறலுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் விமான சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • மேலும், விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel