Type Here to Get Search Results !

கே.வி.காமத் குழுவின் (KV Kamath Committee) பரிந்துரை-2020




கே.வி.காமத் குழுவின் (KV Kamath Committee) பரிந்துரையின் படி, கட்டுமானம், எஃகு உற்பத்தி, சாலைகள் அமைப்பு, மனை வணிகம், மொத்த வியாபாரம், ஜவுளி, ரசாயனம், நுகா்வுப் பொருள்கள், எஃகு அல்லாத உலோகங்கள், மருந்து உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, ஆபரண கற்கள் மற்றும் நகைகள், சிமெண்ட், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா, சுரங்கம், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு, வாகன தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள், வாகன விநியோகஸ்தா்கள், விமானப் போக்குவரத்து, சா்க்கரை, துறைமுகம் மற்றும் அது சார்ந்த சேவைகள், கப்பல் போக்குவரத்து, கட்டட கட்டுமானத்துக்கான பொருள்கள், பெருநிறுவன சில்லறை விற்பனையகங்கள் உள்ளிட்ட 26 துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கே.வி.காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசா்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. 
  • ⌖வங்கிக் கடன் பெற்ற நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை இறுதி செய்யும்போது அந்த நிறுவனத்தின் மொத்த நிலுவை கடன்கள், உறுதியாகத் தெரிந்த நிகர மதிப்பு, வரி- வட்டிக்கு முந்தைய வருவாய், விற்றுமுதல்-கடன் விகிதம் ஆகியவற்றை வங்கிகள் கருத்தில் கொள்ள வேண்டும். 
  • ⌖ 2020 மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, வாராக்கடனாக அறிவிக்கப்பட்டு 30 நாள்கள் கடந்திருக்காத கடன் கணக்குகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த கடன் மறுசீரமைப்புக்குத் தகுதியானவை. 
  • ⌖ரூ.1,500 கோடிக்கும் அதிகமான கடன் மதிப்பு கொண்ட நிறுவனங்களுக்காக இந்தக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பீடு மேற்கொள்ளப்படாத துறைகள் சாா்ந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் தாங்களாகவே குறிப்பிட்ட மதிப்பீட்டை நிா்ணயித்துக்கொள்ளலாம். 
  • ⌖கடன் மறுசீரமைப்புத் திட்டமானது நடப்பாண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்ளாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 180 நாள்களுக்குள்ளாக அது அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது. 
  • கரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்காக கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவிப்பது தொடா்பாக பரிந்துரைக்க முன்னாள் மூத்த வங்கியாளா் கே.வி.காமத் (KV Kamath) தலைமையிலான ஐந்து நபர் குழுவை ரிசா்வ் வங்கி ஆகஸ்டு 2020 ல் அமைத்தது. இதில் திவாகர் குப்தா (Diwakar Gupta), TN மனோகரன் (TN Manoharan), அஸ்வின் பாரேக் (Ashvin Parekh) மற்றும் சுனில் மேத்தா ( Sunil Mehta ) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel