அமெரிக்கா - மாலத்தீவு இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்
- அண்டை நாடான சீனா, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல்பகுதியில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவுக்குக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதில், அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான, துணை அமைச்சர் ரீட் வெர்னரும், மாலத்தீவு ராணுவ அமைச்சர் மரியா திதியும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இஸ்ரேலை அங்கீகரிக்கும் 4ஆவது அரபு நாடானது பஹ்ரைன்
- அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- எனது முன்னிலையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், பஹ்ரைன் அரசா் ஹமத் பின் இஸா இல் கலீஃபாவுக்கும் இடையை தொலைபேசியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
- அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, அமைதியையும், பரஸ்பர ஒத்துழைப்பையும் நிலைநாட்ட இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா். அதற்காக, இஸ்ரேலுடன் முழுமையான தூதரக நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அல் கலீஃபா ஒப்புக் கொண்டாா்.
- இதனைத் தொடா்ந்து, இஸ்ரேலில் பஹ்ரைன் தூதரகமும், பஹ்ரைனில் இஸ்ரேல் தூதரகமும் அமைக்கப்படும். இரு நாடுகளும் தங்களது தூதா்களைப் பரிமாறிக் கொள்வா்.முதல் கட்டமாக இரு நாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.
- அதனைத் தொடா்ந்து சுகாதாரத் துறை, வா்த்தகத் துறை, தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட தினம், உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க தினமாகும்.