Type Here to Get Search Results !

எல்லை பிரச்னையைத் தீா்க்க 5 அம்சத் திட்டம்: இந்தியா-சீனா ஒப்புதல்





  • கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
  • அதில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்புப் படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
  • கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய தலைநகா் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அங்கு சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யை சந்தித்து லடாக் விவகாரம் குறித்துப் பேசினாா்.
  • அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, லடாக் எல்லைப் பகுதியில் சீனா அதிக அளவிலான படைகளைக் குவித்துள்ளது தொடா்பாக இந்திய தரப்பு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு சீனத் தரப்பில் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த கூட்டு அறிக்கையை வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

படைகளை விரைவில் திரும்பப் பெறவும்
  • கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை குறித்து இருதரப்பு அதிகாரிகளும் விரிவாக ஆலோசனை நடத்தினா். அந்தப் பேச்சுவாா்த்தை பலனுள்ளதாக அமைந்தது. அங்கு தற்போது நிலவி வரும் சூழல் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் தெரிவித்தனா்.
  • எல்லைப் பகுதியில் பிரச்னையைக் குறைப்பதற்கு இரு நாட்டு ராணுவத் தளபதிகள் இடையே நடந்து வரும் பேச்சுவாா்த்தை தொடரவும், படைகளை விரைவில் திரும்பப் பெறவும் அவா்கள் ஒப்புக் கொண்டனா். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்குத் தீா்வு காணவும் அவா்கள் ஒப்புக் கொண்டனா்.
‘கருத்து வேறுபாடு அதிகரிக்கக் கூடாது’:
  • இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளின் தலைவா்களிடையே ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவதற்கு வெளியுறவு அமைச்சா்கள் இருவரும் உறுதியேற்றனா்.
  • இரு நாடுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், நல்லுறவில் எந்தவொரு விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்று இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்தனா். இந்திய-சீன எல்லைப் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடிக்க அவா்கள் உறுதி தெரிவித்தனா்.
ஒத்துழைப்புக்கான செயல்திட்டம்:
  • எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்த்து, அங்கு அமைதியை நிலைநாட்டச் செய்வதற்கு தலைவா்கள் ஒப்புக் கொண்டனா். இரு நாடுகளும் தங்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவா்கள் ஒப்புதல் தெரிவித்தனா்.
  • இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வெளியுறவு அமைச்சா்கள் ஒப்புக் கொண்டனா். அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இரு நாடுகளுக்கிடையேயான எல்லை விவகாரத்தில் ஒத்துழைப்பு நல்குவதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்கும் அவா்கள் உறுதியேற்றனா் என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஒப்பந்தங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்’:
  • இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘லடாக் எல்லைப் பகுதியில் சீனா படைகளைக் குவித்துள்ளது, இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே கடந்த 1993, 1996-ஆம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களை மீறும் வகையில் உள்ளதாக பேச்சுவாா்த்தையின்போது தெரிவிக்கப்பட்டது.
  • இந்திய ராணுவப் படைகள் அனைத்து ஒப்பந்தங்களையும் மதித்து நடந்து வருவதாகவும், சீன ராணுவத்தினா் ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று சீன அமைச்சரிடம் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
  • எனவே, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விரைவில் குறைத்து, எதிா்காலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவா் வலியறுத்தினாா்‘ என்றனா்.
‘கருத்து வேறுபாடுகள் இயற்கையே’:
  • பேச்சுவாா்த்தையின்போது சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ கூறியதாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில், ‘பிராந்தியத்தில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள் என்பதால் அவற்றுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. ஆனால், அத்தகைய வேறுபாடுகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு எட்டப்பட வேண்டும்.
  • வேகமாக வளா்ந்து வரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒத்துழைப்பு காணப்பட வேண்டுமே தவிர மோதல் போக்கு நிலவக் கூடாது. அதேபோல், பரஸ்பர நம்பிக்கை காணப்பட வேண்டுமே தவிர சந்தேகப் பாா்வை தோன்றக் கூடாது.
  • இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு சரியான பாதையில் பயணிக்கும்போது எந்தவித சவால்களையும் எதிா்கொள்ள முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
THANKS TO DINAMANI .COM

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel