- ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வேளாண் துறை தொடர்பான 'கிருஷி பவன்' என்ற கட்டிடத்தை முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 2018 செப்டம்பரில் திறந்து வைத்தார். மூன்று மாடிகளுடன் சுமார் 80 ஆயிரம் சதுர அடியில் மிகவும் கலைநயத்துடன் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- கல்வி மையம், பொது நூலகம், கலையரங்கம், தோட்டம், கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள், அருங்காட்சியம் என பல்வேறு பிரிவுகளை இக்கட்டிடம் கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலை இயக்குநரகங்களின் தலைமையகமும் இங்கு செயல்படுகிறது.
- இந்தக் கட்டிடம் கவுரவமிக்க சர்வதேச விருதான 'ஏஇசட்' விருத்துக்கு (AZ Award) தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான ஏஇசட் விருதுகளில் சமூகப் பயன்பாடு கட்டிடப் பிரிவில் மக்களின் விருப்பத் தேர்வாக இந்தக் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா அரசு கட்டிடத்துக்கு சர்வதேச ஏஇசட் விருது / INTERNATIONAL AZ AWARD FOR ODISHA GOVERMENT BUILDING
September 22, 2020
0
Tags