- செப்டம்பர் 5, 2020 அன்று, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர், மாநிலங்களின் வணிக சீர்திருத்த செயல் திட்ட தரவரிசையின் நான்காவது பதிப்பை அறிமுகப்படுத்தினார்.
தரவரிசையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- தரவரிசை 2015 முதல் தொடங்கப்படுகிறது. வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2018-19 இல் 180 சீர்திருத்த புள்ளிகள் உள்ளன,
- அவை ஒற்றை சாளர அமைப்பு, தகவல் அணுகல், தொழிலாளர், சுற்றுச்சூழல் போன்ற வணிக ஒழுங்குமுறை பகுதிகளை உள்ளடக்கியது. இந்த முறை தரவரிசை 30,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பின்னூட்டங்களுக்கு முழு வெயிட்டேஜை வழங்குகிறது.
- எளிதாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து 3வது ஆண்டாக ஆந்திரா முதல் இடத்தை பிடித்தது.
- உத்தரப் பிரதேச மாநிலம் 10 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியது. தெலங்கானா 3வது இடத்திற்கு பின்தங்கியது. தமிழகம் 14வது இடத்தை பிடித்துள்ளது.
- மாநில வர்த்தக சீர்த்திருத்த செயல் திட்டத்தின் கீழ் மத்திய தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறை, உலக வங்கியுடன் இணைந்து இந்தியாவில் எளிதாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
- முதலீட்டாளர் பாதுகாப்பு, மின்சார வசதி, கடனுதவி, தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை, தொழில் துவங்கும் நடைமுறைகள் போன்றவற்றை வைத்து இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
- இதில், ஆந்திர மாநிலம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளிலும் ஆந்திரா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த தெலங்கானா மாநிலம், இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- கடந்த 2018ல் 12வது இடத்தில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலம், 10 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. டாப்-10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் முறையே மத்திய பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (5), சட்டீஸ்கர் (6), இமாச்சல் பிரதேசம் (7), ராஜஸ்தான் (8), மேற்கு வங்கம் (9), குஜராத் (10) மாநிலங்கள் உள்ளன. தமிழகம் 14வது இடத்தில் உள்ளது.
- கடந்த 2018ல் 15வது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி உள்ளது. அண்டை மாநிலமான கேரளா 28வது இடத்தில் உள்ளது. திரிபுரா கடைசி இடமான 36வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்த அரியானா இம்முறை 16வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது.
- டெல்லி 23வது இடத்தில் இருந்து 12வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. குஜராத் கடந்த 2018ல் 5வது இடத்திலிருந்து தற்போது 10வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 13வது இடத்தில் உள்ளது. அசாம் 20, ஜம்மு காஷ்மீர் 21, கோவா 24, பீகார் 26வது இடங்களை பிடித்துள்ளன. புதுச்சேரி 27வது இடத்தில் உள்ளது.
- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று அளித்த பேட்டியில், ''உலக வங்கியின் சர்வதேச அளவில் எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தை பிடித்துள்ளது.
- மாநில அளவிலான தொழில் ஊக்குவிப்பு நடைமுறைகள் மற்றும் தரவரிசையின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் தரவரிசையும் முன்னேறும். மாநில அளவில் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.
- தரவரிசை 1: ஆந்திரா
- தரவரிசை 2: உத்தரபிரதேசம்
- தரவரிசை 3: தெலுங்கானா
- தரவரிசை 4: ஜார்க்கண்ட்
- தரவரிசை 5: மத்தியப் பிரதேசம்
- தரவரிசை 6: சத்தீஸ்கர்
- தரவரிசை 7: இமாச்சலப் பிரதேசம்
- தரவரிசை 8: ராஜஸ்தான்
- தரவரிசை 9: மேற்கு வங்கம்
- தரவரிசை 10: குஜராத்
வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டம் என்றால் என்ன?
- இந்த திட்டத்தை டிபிஐஐடி-உலக வங்கி வெளியிட்டது. இது 19 மாநிலத் துறைகளால் செயல்படுத்தப்படவுள்ள 80 சீர்திருத்தங்களை (187 சீர்திருத்த நடவடிக்கை புள்ளிகள்) கொண்டுள்ளது.
- அவற்றில், ஆந்திரா 187 சீர்திருத்த நடவடிக்கை புள்ளிகளுக்கு 100% இணக்கத்தை அடைந்தது.
- வணிக சீர்திருத்த செயல் திட்டம் எளிதான வணிகத்தை மேம்படுத்த உதவுகிறது. 190 நாடுகளில் 2019 ஆம் ஆண்டில் இந்தியா 63 வது இடத்திற்கு முன்னேறியது