- கடித்து துாக்கம் கெடுக்கும் கொசுவை கூண்டோடு ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க மாட்டாங்களானு ஏங்காத ஆட்களே இல்லை. அனாபிலஸ்'என்ற பெண் கொசுக்கள் மூலம் மலேரியா பரவுகிறது என்று 1897ல் உத்தரகாண்ட் மாநில டாக்டர் ரெனால்டு ரோஸ் கண்டுபிடித்தார்.
- இந்த நாளின் நினைவாக மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆக.20ல் உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொசு வகைகளில் ஆபத்தானவை மலேரியாவை உருவாக்கும் 'அனாபிலஸ்' டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்' யானைக்கால் மற்றும் மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'கியூலக்ஸ்' என்ற மூன்று கொசுக்கள் தான்.
- இவற்றால் நோய்கள் பரவுவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படும். பெண் கொசுக்கள் வாழ்நாளில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் இடும். ஆண் கொசுக்கள் 10 நாட்கள் பெண் கொசுக்கள் 6 வாரம் உயிர் வாழும்.
- இவை அதிக துாரம் பயணிக்காது. ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. தாவர சாற்றை உறிஞ்சி வாழும். பெண் கொசுக்கள்தான் முட்டைகளை உருவாக்க தேவைப்படும் புரதத்தை பெறவதற்காக மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. உலக அளவில் மலேரியாவுக்கு ஆண்டுதோறும் 5 முதல் 10 லட்சம் பேர் இறக்கின்றனர்.
- இதில் குழந்தைகளே அதிகம். இந்த உயிரிழப்பை தடுக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. எத்தனை கொசு விரட்டிகள் கண்டுபிடித்தாலும் கொசுவை ஒழிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தோல்வியே கிடைக்கிறது.கொசுக்கள் நீரில் தான் முட்டையிடுகின்றன. மழைக்காலத்தில் அதிகம் பெருகுகின்றன.
- எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். டயர்கள் டப்பா சிரட்டைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
- பாத்திரங்களை சுத்தமாக கழுவி கவிழ்த்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை கையாண்டு கொசுக் கடியில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்டால் ஓரளவு தப்பிக்கலாம்.