- இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த் விரைவில் கடலில் தனது பணியைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படை வட்டாரங்களின்படி, ஐ.என்.எஸ் விக்ராந்தின் துறைமுக அளவிலான சோதனைகள் நிறைவடைந்துள்ளன.
- அடுத்தக்கட்ட சோதனைகள் செப்டம்பரில் தொடங்கும். இரண்டாம் கட்ட சோதனையான பேசின் சோதனைக்குப் பிறகு, ஐ.என்.எஸ் விக்ராந்தின் சோதனை ஓட்டம் கடலில் தொடங்கும். 2023 க்குள் விக்ராந்த் கடற்படையில் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 262 மீட்டர் நீளமுள்ள INS Vikrantஇன் கட்டுமானம் 2009 பிப்ரவரியில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது. INS Vikrantஇல் 26 போர் விமானங்களும் 10 ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- தற்போது INS Vikrantக்காக கேரியருக்கு MiG-29K தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, Ka-31, Westland Sea King மற்றும் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் Dhruvவும் துருவையும் INS Vikrantஇல் நிறுத்தப்படலாம்.
- ஐ.என்.எஸ் விக்ராந்தின் துறைமுக சோதனைகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், கோவிட் -19 காரணமாக பேசின் சோதனைகள் தாமதமாகி வருகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேசின் சோதனைகளில், கப்பலில் பொருத்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் கடலில் தரையிறக்க முடியுமா என்பதற்கான இறுதிகட்டச் சோதனை செய்யப்படும்.
- இந்த சோதனைகளின் போது, கப்பல் கட்டுமான அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தியாளர்களும் அங்கு இருப்பார்கள். கோவிட் காரணமாக, இந்தச் சோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- கிழக்கு கடற்பரப்பில் விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்தை வைக்க இந்திய கடற்படை விரும்புகிறது. ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல், மேற்கு கடற்கரையில் கார்வாரில் உள்ளது.
- கடல் பாதுகாப்புக்காக, மூன்று carrier battle group (CVBG)க்களை ஒதுக்கீடு செய்வது இந்தியாவின் நீண்ட கால விருப்பம். இந்த CVBGக்களில் ஆயுதம் தாங்கிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
- நீண்ட கடல் எல்லையை பாதுகாப்பதோடு, வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்காக கிழக்கு மற்றும் மேற்கில் தலா ஒரு CVBGயை நிறுத்த இந்திய கடற்படை விரும்புகிறது. மூன்றாவது CVBG, பழுது பார்த்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும்.
- NCC: 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம்
இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் INS Vikrant
August 20, 2020
0
Tags