Type Here to Get Search Results !

புலிட்சர் விருது / PULITZER AWARD

  • அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரில், கடந்த 1912 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் மூலம், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பத்திரிகைகளில் பணிபுரிகிறவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுவருகிறது.
  • இந்த, விருதை உருவாக்கிய ஜோசப் புலிட்சர் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர். அந்நாட்டில், நடந்த உள்நாட்டுப்போரால் அமெரிக்காவுக்கு வந்து பத்திரிகையாளர் ஆனவர், பின்னர் செயிண்ட் லூயி போஸ்ட்- டிஸ்பாட்ச், தி நியூயார்க் வேர்ல்டு பத்திரிகையின் உரிமையாளர் ஆனார்.
  • சற்று பார்வை குறைபாடுடைய ஜோசப் புலிட்சரின் கட்டுரைகள் பல உலகின் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தனது மரணத்துக்குப்பிறகு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையைத் தொடங்கவும், தனது பெயரால் பெயரால் புலிட்சர் விருது வழங்கவும் தேவையான நிதியை ஒதுக்கி உயில் எழுதினார். 1911-ல் மரணம் அடைந்தார்.
  • ஆரம்பத்தில், பத்திரிகைத்துறையினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புலிட்சர் விருது தற்போது பலத்துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை, இந்தியாவில் புலிட்சர் விருதை பெரும் எட்டாவது பத்திரிகையாளர்கள் இவர்கள்தான். 
  • இதற்குமுன்பு, 1937 ஆம் ஆண்டு கோபிந்த் பெகரிலால், 2000 ஆம் ஆண்டு ஜூம்பா லாகரி, 2003 ஆண்டு கீதா ஆனந்த், 2011 ஆம் ஆண்டு சித்தார்த் முகர்ஜி, 2014 ஆம் ஆண்டு விஜய் சேஷாத்திரி, 2015 ஆம் பழனி குமணன் (இவ்விருது பெற்ற ஒரே தமிழர் இவர்தான். 
  • இவர், தமிழ்தேசியவாதி பழ.நெடுமாறனின் மகன்), 2018 ஆம் ஆண்டு தானிஷ் சித்திகி, அத்தினான் அபிதி ஆகியோருக்கு பிறகு, காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த தர் யாசின், முக்தர் கானுக்கும், ஜம்முவைச் சேர்ந்த சன்னி ஆனந்த் ஆகியோருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 108 வருடகால வரலாறும் சிறப்பும் கொண்ட புலிட்சர் விருது பட்டியிலில், இவர்கள் மூவரையும் சேர்த்து இந்தியர்கள் மொத்தம் பத்துபேர்தான் வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், ஜூம்பா லாகரியும், கீதா ஆனந்த் புலிட்சர் விருது பெற்ற இரண்டு இந்திய பெண்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel