Type Here to Get Search Results !

TNPSC 7th AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உயா்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கம்
  • புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அதில் செய்முறைக் கல்வி, அனுபவம் வாயிலான கல்வி, தொழில்முறைக் கல்வி, பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல், மதிப்பீட்டு முறையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
  • புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும் எதிா்ப்பும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், 'உயா்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள்' என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கை பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்.
  • நாட்டில் பல ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் காரணமாக மாணவா்களின் சிந்தனைத் திறன் தடைபட்டது. அவா்களிடம் ஆட்டுமந்தைக் கூட்டம் போன்ற மனநிலையே காணப்பட்டது. அந்த மனநிலையே ஊக்குவிக்கப்பட்டது.
  • தற்போதைய சூழலில் இளைஞா்களின் கற்பனைத் திறனும் புத்தாக்கத் திறனும் மேம்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அதற்காக அவா்களுக்கு கல்வி மீதான பிடிப்பை ஏற்படுத்துவதோடு கல்வி கற்பதற்கான நோக்கத்தையும் தெரியப்படுத்த வேண்டும். இதுவரை எதை சிந்திக்க வேண்டும் என்பதே மாணவா்களுக்கு கற்பிக்கப்பட்டது.
  • புதிய கல்விக் கொள்கையானது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை மாணவா்களுக்கு கற்பிக்க உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமக்கு பல்வேறு தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் நமக்கு எந்தத் தகவல்கள் அவசியமானவை என்பதை முடிவு செய்ய வேண்டியதே முக்கியமாக உள்ளது.
  • அத்தைகய மனநிலையை அடைவதற்கு ஆராய்ச்சி அடிப்படையிலான, கருத்துப் பரிமாற்றம் அடிப்படையிலான கற்பித்தல் அவசியமாகிறது. அது மாணவா்களுக்கு கல்வி கற்றல் மீதான ஆா்வத்தை அதிகரிக்கும். 
  • புதிய கல்விக் கொள்கையில் யாருக்கும் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. திறமைமிக்க இளைஞா்கள் இந்தியாவிலேயே இருந்து வருங்கால சந்ததியினருக்கான வளா்ச்சிப் பணியில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
  • மாணவா்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கப்படும். இது மாணவா்களுக்கு தரம்வாய்ந்த கல்வி கிடைப்பதையும் உயா்கல்வி நிறுவனங்கள் மேலும் வளா்ச்சியடைவதையும் ஊக்குவிக்கும்.
  • புதிய கல்விக் கொள்கையானது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அத்தகைய ஆரோக்கியம் நிறைந்த விவாதங்கள் மூலமாக கல்வித் துறையை சீா்திருத்துவதற்கான யோசனைகள் கிடைக்கும். புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சீா்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
  • அந்த சீா்திருத்தங்கள் அனைத்தையும் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்று பலா் கேள்வி எழுப்பி வருகின்றனா். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. சீா்திருத்த நடவடிக்கைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
  • பல்கலைக்கழக மானியக் குழுவுடன் இணைந்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 10.28 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

  • பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் அளிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  • இதில், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதில், கலந்துகொண்ட வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலா் துா்கா சங்கா், இந்த ஆண்டு இறுதிக்குள் 60 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றாா்.
  • இக்கூட்டத்தில் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக 10.28 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1.06 கோடியாக அதிகரித்துள்ளது.
  • அனைவருக்கும் வீடு திட்டத்துக்காக, மொத்தம் ரூ.6.31 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1.67 லட்சம் கோடியாகும். இந்தத் தொகையில், இதுவரை ரூ.72,646 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • தற்போது 67 லட்சம் வீடுகளுக்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 35 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, மக்கள் குடியேறிவிட்டனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி ராஜபக்சே  வெற்றி

  • இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் லங்கா மக்கள் கட்சி, மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டன. 
  • இதன் முடிவுகளை இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி, மகிந்தா ராஜபக்சே தலைமையிலான லங்கா மக்கள் கட்சி, தேர்தல் நடந்த 196 இடங்களில் 145 இடங்களை தனித்தே பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. 
  • இதன் கூட்டணி கட்சியான புதுஜன கட்சி 5 இடங்களை பிடித்தது. இதன் மூலம், இக்கூட்டணி மொத்தமாக 150 இடங்களை பிடித்துள்ளன. இந்நாட்டில் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 18ஐ இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது.
  • எஞ்சியுள்ள இடங்களை மற்ற கட்சிகள் பகிர்ந்து கொண்டுள்ளன. ஸ்ரீலங்கா மக்கள் கட்சி மட்டும் தனித்தே, பதிவான மொத்த வாக்குகளில் 59.9 சதவீதத்தை பெற்றுள்ளது. 
  • ரணில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாசாவின் 'சமகி ஜனதா பாலவேகயா' என்ற புதிய கட்சி, 55 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு 23 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 
  • தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த தமிழ் கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்று 3வது இடத்தையும் (கடந்த முறை 16), மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா 3 இடங்களை பிடித்து (கடந்த முறை 6) 4வது இடத்தையும் பிடித்தன.
  • இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு இடத்தில் கூட இது வெற்றி பெறவில்லை. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில், 5வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

யுபிஎஸ்சி புதிய தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்

  • யுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து மத்திய குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி இன்று நியமிக்கப்பட்டார்.
  • தற்போது யுபிஎஸ்சியின் உறுப்பினராக உள்ள இவர், சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் பொது சேவை ஆணையங்களின் தலைவராக இருந்த ஜோஷி, மே 2015 இல் யுபிஎஸ்சியில் உறுப்பினராக சேர்ந்தார். தற்போது தலைவராக பதவியேற்ற ஜோஷியின் பதவிக்காலம் மே 12, 2021 நிறைவடையும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
  • பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவு செய்கிறது. 
  • இதனால் பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவ்விரு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
  • எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது.
  • தேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த மின்சார வாகனக் கொள்கை நாட்டின் மிக முற்போக்கான கொள்கையாகும். 
கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அகரத்தில் நடைபெற்ற பணியின் போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்க பட்டு உள்ளன.
  • இதன் ஒரு உறை முக்கால் அடி உயரமும் இரண்டு அறை அடி அகலமும் கொண்டு உள்ளது. மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டு பிடிக்கபட்டு உள்ளது. ஏற்கனவே அகரத்தில் சிறிய பனைகள், நத்தை ஓடுகள், சங்கு வளையல்கள், தங்க நாணயங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
  • இந்தபகுதி மக்கள் வசிப்பிடமாக இருந்து வந்ததாகவும் அதன அடிப்படையில் அகரத்தில் பணிகள் மேற் கொண்டு வருகின்றனர். தண்ணீரை எவ்வாறு சேமித்து வைத்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பழங்காலத்தில் சிந்தித்து உள்ளனர்.
  • தொடர்ந்து அகழாய்வு நடைபெறும் கீழடி பகுதியில் விலங்கின் எழும்பு கூடுகள், கட்டிட சுவர்கள், சிறிய பெரிய பனைகள், கழிவு நீர் வாய்கால்கள், இரும்பு உலைகள் ஆகியவை கண்டுபிடிக்கபட்டுள்ளன.
  • இதே போல் கொந்தகை அகழாய்வில் மனித எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிக்கள், குழந்தையின் முழு எலும்புகள் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதே மணலூரில் சுடுமண் உலை, சிறிய மற்றும் பெரிய எலும்புகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வில் வியக்கத்தக்க பொருட்கள், பழங்கால மக்கள் வாழந்த நகர, நாகரிகம், பயன்படுத்தி பொருட்கள், விவசாயத்தில் அப்போதே சிறந்த விளங்கிய ஆதாரங்கள கிடைத்து வருவதால் பழங்கால தமிழரின் வாழ்க்கை உலகத்திற்கே எடுத்துகாட்டாக விளஙகி வருகின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel