- தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா 7 ஆகஸ்ட் 2020 துவங்குகிறது. இந்த விழாவானது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் என கூறப்படுகிறது.
- இந்த தேசபக்தி திரைப்பட விழா வரும் 21ந்தேதி வரை நடைபெறுகிறது.
- சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை குறிக்கும் வகையிலும் , இந்திய சுதந்தர வரலாற்றை விளக்கும் வகையிலும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவை முன்னிட்டு நாள்தோறும் www.cinemasofindia.com என்ற இணையதளத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தேசபக்தி படங்கள் ஒளிபரப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் , தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட 43 திரைப்படங்கள் இணையதளத்தில் ஒளிபரப்ப பட உள்ளன.
முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா-Online Patriotic Film Festival
August 08, 2020
0
Tags