- ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
- இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்து விட்டதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம், ஜியோவில் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவீத பங்குகளை வாங்கியது.
- இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 80.6 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 22 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்டாவை பின்னுக்கு தள்ளி, முகேஷ் அம்பானி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
- பெர்னார்ட் அர்னால்டின் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்ததால், அவரது சொத்து மதிப்பு 80.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி, இதற்கு முன்னதாக, எலோன் மஸ்க், செர்ஜி பிரின், லாரி பேஜ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் படிப்படியாக முன்னேறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி!-Reliance Chairman Mukesh Ambani has moved up to 4th position in the list of richest people in the world.
August 08, 2020
0
Tags