கொரோனா இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு - 22 மாநிலங்களுக்கு 980 கோடி
- இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மத்திய அரசு இரண்டாவது கட்டமாக மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது.
- மகாராஷ்டிரா, தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கோவா, குஜராத், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு 980 கோடி ரூபாயும் பிரித்தளிக்கப்படும்.
- மருத்துவமனைகளை தயார்படுத்துதல், பிசி ஆர் கிட்கள் வாங்குதல் போன்றவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்திக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதற்கு முன்னதாக முதல்கட்ட நிதித்தொகுப்பாக 3000 கோடி ரூபாய் ஏப்ரல் மாதம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
- ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யபப்பட்டது. மேலும், அம்மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
- ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஷ் சந்திர முர்மு, அக்டோபர் 31-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
- ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெயரைப் பெற்ற கிரிஷ் சந்திர முர்மு, 9 மாதங்களுக்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா (61) நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில், ரயில்வே துறையின் இணையமைச்சராக பதவி வகித்தவர் மனோஜ் சின்ஹா. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் காஸிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் ரூ.304 கோடியில் 31 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
- மதுரை, திண்டுக்கல் உட்பட தென்மாவட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், புதிய பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முதல்வர் பழனிசாமி நேற்று காலை திண்டுக்கல் வந்தார்.
- திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
- அதைத் தொடர்ந்து நடந்தநிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார். மேலும், ரூ.304.55 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக ஜி.சி. முா்மு நியமனம்
- இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (சிஏஜி) ஜி.சி.முா்முவை மத்திய அரசு வியாழக்கிழமை நியமித்தது.
- முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு தனது பதவியை கடந்த புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா்.
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
- 60 வயதாகும் முா்மு குஜராத்தைச் சோந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். பிரதமா் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு தலைமைச் செயலராக முா்மு பணியாற்றினாா். மத்திய நிதித்துறை செயலராகவும் அவா் இருந்துள்ளாா்.
- கடந்த ஆண்டு அக்டோபா் 29-இல் அவா் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றாா். இப்போது, சிஏஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
- இப்போது சிஏஜி-யாக உள்ள ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
இந்தியாவின் முதல் கிஸான் ரயில்
- பழங்கள், காய்கறிகள், பூக்கள் , இறைச்சி, மீன் உள்ளிட்ட அழிந்து போக்கூடிய பொருட்களின் தடையற்ற விநியோக சங்கிலியை வழங்குவதற்காக ரயில்வே அமைச்சகத்தால் முதல் கிஸான் ரயில் துவக்கப்பட்டுள்ளது.
- கிஸான் ரயில் துவக்கப்படுவது குறித்து 2020-21 வது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாகா., மாநிலம் நாசிக்கின் தேவ்லாலியில் இருந்து பீகார் மாநிலம் தனபூர் பகுதிக்கு சென்றடைகிறது.
- மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைக்கிறார்.
- 1,519 கி.மீ., தூரத்தை 35 மணி நேரத்தில் சென்றைடையும் எனவும் வாராந்திர ரயிலாக இந்த ரயில் இயக்கப்படும். ஒன்பது பெட்டிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இயக்கப்படுகிறது.
- சாதாரண சரக்கு ரயில்களை காட்டிலும் ஒன்றரை மடங்கு கட்டணம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ரயில் பாட்னா,பிரயாக்ராஜ் மற்றும் கட்னி ஆகிய பகுதிகளின் தேவையான , பூக்கள் , இறைச்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
- தேவலாலி - நாசிக் சாலை, மன்மத், ஜல்கான், பூசாவல், புர்ஹான்பூர், காண்ட்வா, எல்டார்சி, ஜபல்பூர், சட்னா, கட்னி, மணிக்பூர், பிரயாகராஜ் சியோகி, பண்டிட். தீன்தயாள் உபாத்ய நகர் மற்றும் பக்ஸர் ஆகிய பகுதிவழியாக பயணிக்க உள்ளது.